நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் !தேர்வை நடத்தியது தமிழக அரசு அல்ல, மத்திய அரசு தான் -அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதற்கு தமிழக அரசு காரணமல்ல என்று அமைச்சர்

By venu | Published: Sep 20, 2019 07:55 PM

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதற்கு தமிழக அரசு காரணமல்ல என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தேனி மருத்துவ கல்லூரியில் உதித்  சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டது. பின் மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வெழுதி பயின்று வந்த உதித் சூர்யா என்பவரது நீட் தேர்வு  நுழைவு சீட்டில் உள்ள புகைப்படமும்,  தற்போதைய புகைப்படமும் ஒன்றாக இல்லாத காரணத்தால் அவர் மீது சந்தேகம் எழுந்தது.இதன் பின்னர் அவர் மீது காவல்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.ஆனால் அந்த மாணவன் மனஅழுத்தம் காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் .நீட் தேர்வை மத்திய அரசு தான் நடத்தியது.எனவே இதற்கு காரணம் தமிழக அரசு இல்லை .இருப்பினும், மருத்துவ மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc