ரவிச்சந்திரனுக்கு பரோல், 3 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்-உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் மனு மீது 3 வாரத்துக்குள்

By venu | Published: Oct 15, 2019 04:51 PM

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் மனு மீது 3 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி,பேரறிவாளன் ,சாந்தன்,ரவிச்சந்திரன்,முருகன்,ராபர்ட் பயாஸ் ,ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் சார்பில் பரோல் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ,ரவிச்சந்திரனின் பரோல் மனு மீதான பரிசீலனையை செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc