தமிழகத்தில் இருக்கும் குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது-வேலுமணி

சென்னையில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டார்

By venu | Published: Aug 24, 2019 10:10 AM

சென்னையில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டார் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,சென்னை மற்றும் தமிழகத்தில் இருக்கும் குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் மட்டும் 8 லட்சத்து 76 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளது. தெலுங்கு - கங்கை திட்டம் மூலம் ஆந்திராவில் இருந்து 8 டி.எம்.சி தண்ணீர் இன்னும் 25 நாட்களில் சென்னையை வந்தடையும் என்றும் தமிழகத்தில் குடிமாரமத்து பணிகள் மற்றும் வண்டல் மண் எடுக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். 
Step2: Place in ads Display sections

unicc