வங்கி நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை – விவசாயிகளுக்கு கூடுதல் கடனுதவி.!

வங்கி முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தற்போது வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனையில், சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன் வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுமுடக்கம் காரணமாக சிறு, குறு தொழில்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், தற்போது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, வங்கிகள் சிறப்பு முகாம்கள் மூலம் உழவர் கடன் அட்டை வழங்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை. சிறு, குறு நிறுவனங்களுக்கு தற்போதைய தேவை கடன் தான் என்று கூறியுள்ளார். மேலும், வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பு தமிழகத்துக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளுக்கு வங்கிகள் உடனுக்குடன் கடனுதவி வழங்க வேண்டும் என்றும் ஆலோசனையில் முதல்வர் பேசியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்