புதிய பாடத்திட்டத்தில் தமிழ் மொழி சர்ச்சை!13 பேருக்கு நோட்டீஸ்,3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

தமிழக  பள்ளிக்கல்வித்துறை  நடப்பு ஆண்டிற்கான 12 ஆம்  வகுப்பிற்கு புதிய பாடத்திட்டத்தை  அறிமுகப்படுத்தப்படுத்தியது .அந்த பாடப்புத்தகத்தில் ஆங்கில புத்தகத்தில் தொன்மையான மொழியான தமிழின் நிலை என்ற தலைப்பில் பாடம் இடம் பெற்றுள்ளது.இதில்  உலகின் பழங்கால மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி கி.மு 300 ஆண்டுகள் முன்பு உருவானதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதேபோல், மற்ற தொன்மை மொழிகளான சீன மொழி கி.மு 1250 ஆண்டிலும், கிரேக்கம் கி.மு 1500 ஆண்டிலும், சம்ஸ்கிருத மொழி கி.மு 2000 ஆண்டு முன்பு உருவானதாகவும் தகவல் உள்ளது.இந்த புதிய பாடத்திட்டத்தில் தமிழ் மொழி குறித்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதாவது தமிழ் மொழி  2300 ஆண்டுகள் பழமையானது என்று தெரிவித்தது தான் சர்சைக்கு முக்கிய காரணம்.

இந்த நிலையில்  தமிழ்மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என்று பாடப்புத்தகத்தில் எழுதிய விவகாரத்தில் நூல் ஆசிரியர்கள் 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பள்ளி  கல்வித்துறை.மேலும்  3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவும் பிறப்பித்துள்ளது.