தமிழ் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது-மு.க.ஸ்டாலின்

தமிழ் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது-மு.க.ஸ்டாலின்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை 5 மொழிகளிலும் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதன்படி, ஆங்கிலம் தவிர, இந்தி,அசாமிஸ், ஓடியா ,தெலுங்கு, கன்னடம் ஆகிய  மொழிகளிலும் தீர்ப்பை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.ஆனால் தமிழ் இடம்பெறாததற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் , உச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில மொழிகளில் வெளியிடுவது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்  கொண்டுவந்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், 6 மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.உச்சநீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Join our channel google news Youtube