பத்திரிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்த தயாரிப்பளார் சங்கம்! என்னென்ன விதிகள்?!

சினிமா தயாரிப்பாளர்களுக்கு சினிமா ஷூட்டிங் செலவு, படத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு

By manikandan | Published: Jul 09, 2019 09:13 AM

சினிமா தயாரிப்பாளர்களுக்கு சினிமா ஷூட்டிங் செலவு, படத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் மட்டுமே கிடையாது. அதற்கும் மேல படத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம், பாடல் வெளியீட்டு விழா, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என பல இருக்கிறது. இதனை குறைக்க தற்போது பட தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் முக்கிய முடிவுகளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி எடுத்துள்ளார். அதாவது, பட விழாக்களுக்கு அழைக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்த வித அன்பளிப்பும் கொடுக்க போவதில்லை எனவும், வருபவர்களுக்கு டீ / ஸ்னாக்ஸ் மட்டுமே கொடுக்கப்படும். படங்களை பற்றி மட்டுமல்லாமல், படத்தில் வேலை பார்த்தவர்களை, தயாரிப்பாளரை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சிப்பவர்கள் இனி பட விழாக்களுக்கு அழைக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு விமர்சிப்பவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Step2: Place in ads Display sections

unicc