எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை அடிச்சி தூக்கிய தமிழ்!

இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை அடிச்சி தூக்கிய தமிழ். இன்று சிறியவர்கள்

By leena | Published: Feb 21, 2020 04:49 PM

இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை அடிச்சி தூக்கிய தமிழ். இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே இணையத்திற்குள் சிக்கி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். இவர்களை ஊக்குவிக்கும் வகையில், கூகுள் நிறுவனமும், விக்கிபீடியாவும் இணைந்து 'வேங்கை திட்டம் 2.0' என்ற கட்டுரை போட்டியை நடத்தியுள்ளனர். இந்த போட்டியானது, கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், கட்டுரைகள் மற்றும் போட்டியாளர்களின் அடிப்படையில் தமிழ் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில், இந்தி மொழியில் 26 போட்டியாளர்கள் கலந்து கொண்டு, 417 கட்டுரைகளை மட்டுமே படைத்திருந்தனர். தமிழ் மொழியில் மொத்தம் 62 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், 2542 கட்டுரைகளை படைத்து, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழ் மொழி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழ் மொழி முதலிடம் பிடித்த நிலையில், அடுத்ததடுத்த இடங்களை, பஞ்சாபி, பெங்காலி மற்றும் உருது போன்ற மொழிகள் பெற்றுள்ளனர். சம்ஸ்கிருத மொழியில், 4 போட்டியாளர்கள், 19 கட்டுரைகளை மட்டுமே படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc