தமிழ் நடிகையை திருமணம் செய்கிறார்..! இந்திய வீரர் மணிஷ் பாண்டே..!

இந்திய அணி  வீரர் மனிஷ் பாண்டே பெங்களூரை சேர்ந்தவர். இவர் இந்திய அணிக்காக 23

By murugan | Published: Oct 11, 2019 02:39 PM

இந்திய அணி  வீரர் மனிஷ் பாண்டே பெங்களூரை சேர்ந்தவர். இவர் இந்திய அணிக்காக 23 ஒரு நாள்  மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது மணிஷ் பாண்டே விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருகிறார். இவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டியை  திருமணம் செய்ய உள்ளார்.இவர் தமிழில் உதயம் NH4 , ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்  ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.ஆனால்  வெளிப்படையாக தெரிவித்தது இல்லை. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி இவர்கள் திருமணம் மும்பையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.இந்த  திருமண நிகழ்ச்சியில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc