டிஜிட்டல் தளத்தில் தொகுப்பாளினியாக களமிறங்கிய தமன்னா.!

ஊரடங்கு காரணமாக டிஜிட்டல் தளத்தில் உரையாடல் நிகழ்ச்சியில் தமன்னா தொகுப்பாளினியாக

By ragi | Published: Jun 30, 2020 12:16 PM

ஊரடங்கு காரணமாக டிஜிட்டல் தளத்தில் உரையாடல் நிகழ்ச்சியில் தமன்னா தொகுப்பாளினியாக மாறியுள்ளார். தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி என்னும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.தற்போது கங்கனா ரணாவத் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது சினிமாத் துறையில் பல பேர் வேலையில்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் அவர் தற்போது டிஜிட்டல் தளத்தில் களமிறங்கியுள்ளார். ஆம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ஆஃப் தளத்தில் ஒளிபரப்பாகும் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc