குழந்தைகளை சம்மர் லீவுக்கு இந்த இடத்திற்கு அழைத்து செல்லுங்கள்

கோடை வந்து விட்டாலே குழந்தைகளின் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை. குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையும் வந்து விடுகிறது. விடுமுறைக்காலத்தில் குழந்தைகளை எங்கு அழைத்து செல்லலாம் என்று கேட்டால் அவர்கள் ஆசைப்படும் இடம் நீர் நிறைந்த பகுதியாக தான் இருக்கும்.

வனவிலங்குகள் சரணாலயம் :

தமிழகத்தில், 13 பறவை சரணாலயங்கள்; ஐந்து தேசிய பூங்காக்கள், மூன்று புலிகள் சரணாலயங்கள், நான்கு யானை சரணாலயங்கள் உள்ளன.இந்த மாதிரியான இடங்களுக்கு நமது குழந்தைகளை அழைத்து செல்லும் போது அவர்கள் அந்த விலங்குகள் ,மற்றும் பறவைகளை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். ஏன்னென்றால் இத்தனை நாட்கள் நாம் இவற்றை படத்தில் மட்டும் தான் காண்பித்திருப்போம்.

அவற்றை நேரில் கொண்டு காண்பிக்கும் போது தான் நமது குட்டி செல்லங்களிடையே ஆயிரம் கேள்விகளை எழுப்பி அவர்களை சந்தோசபடுத்தும்.

படகு சவாரி :

 

குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்குமே.இத்தனை நாட்களாய் குழந்தைகளின் படிப்பில் செலுத்திய அக்கறையை அவர்களின் சந்தோஷத்திலும் சற்று செலுத்துவோம். அவர்களின் மழலையை கொண்டாட கோடைகாலத்தில்  ஏதோ ஒரு படகு சவாரி நிலையத்துக்கு அழைத்துச் செல்லுங்களேன்.அங்கு அவர்கள் கொண்டாடும் சந்தோசத்திற்கு அளவே இருக்காது.

தீம் பார்க் :

 

நம் குழந்தைகளின் சந்தோசத்தை காட்டிலும்  வேறென்னஅழகான விஷயம்  இந்த உலகத்தில் இருந்து விட போகிறது.அவர்களின் சந்தோஷத்திற்காக மட்டுமே நாம் அவர்களுக்கு பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்கிறோம்.

அவர்களை மிகவும் சந்தோசபடுத்த தீம்பார்க்கிற்கு அழைத்து செல்லுங்கள்.அங்கு பல்வேறு வகையான விளையாட்டுகள், சாகச சவாரிகள் உள்ளன. போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு ஆசை தீர ஒரு நாளை அங்கு  உங்கள் குழந்தைகளுக்காக செலவிடுங்கள்.

 

Leave a Comment