புற்றுநோயாளிகளுக்காக கண் கலங்கவைக்கும் வகையில் மாணவி செய்த நெகிழ்ச்சியான செயல்!

இன்று புற்றுநோய் என்பது சர்வசாதாரணமாக மாறிவிட்டது. இந்த நோயால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கிரண்.
இவர் அங்குள்ள கல்லூரியில், இதழியல் முதலாம் ஆண்டு பயின்று வருகின்றார். இவர் புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில், தனது தலைமுடியை மொட்டை அடித்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிக்க தானமாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து மாணவி கிரண் அவர்கள் கூறுகையில், ‘எனது பள்ளி பருவத்தில் நண்பர் ஒருவர் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் கீமோதெரபி சிகிச்சையின் போது, அவருக்கு முடி கொட்டியது. அதற்கு பின் அவர் விக் பயன்படுத்தினார்.
அப்போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணிய போது, இரண்டு வருடங்களுக்கு முன்பு சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மொட்டை அடித்த முடியை வாங்கி விக் தயாரிப்பதை கேள்விபட்டேன்.
அப்போது நான் பாய் கேட் வைத்திருந்தேன். இந்த தகவலை கேள்வி படத்திலிருந்து எனது முடியை நீளமாக வளர்க்க ஆரம்பித்தேன். தற்போது நான் மொட்டை அடித்து எனது முடி அனைத்தையும் விக் செய்ய தானமாக கொடுத்துள்ளேன்’ என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.