பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயணம்.. இன்று முதல் அமல்!

MahaLakshmi Scheme

நாட்டில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் சத்தீஸ்கர்,  மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை  கைப்பற்றிய நிலையில், தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. அதுவும், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சியை தோற்கடித்து, காங்கிரஸ் முதன் முறையாக தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இந்த சூழலில், … Read more

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சகம், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவிற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியை விமர்சித்த திமுக கவுன்சிலர்!

இலவச டிக்கெட்டால் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்கள் அவமதிக்கின்றனர் என திமுக கவுன்சிலர் விமர்சனம். சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய 16-ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், ஒன்றிய குழு உறுப்பினருமான ஈஸ்வரன், பேருந்தில் இலவச டிக்கெட்டால் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்கள் அவமதிக்கின்றனர் என ஆவேசமாக பேசியதால், திமுக ஒன்றிய குழு தலைவர் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தால் பெண்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் … Read more

இவர்களுக்கு கட்டணமில்லை! கல்வி, மருத்துவத்துக்கான திட்டங்கள் இலவசம் ஆகாது – முதலமைச்சர்

2-ஆம் ஆண்டு மாணவர்களும் கல்வி பயில்வதற்கு கட்டணமில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு. சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று வந்தாலும் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு அமைச்சர் அறிவித்தார். கோரிக்கை வைக்காமலேயே … Read more

#BREAKING: அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – ஹரியானா அரசு அறிவிப்பு

ஆகஸ்ட் 11ம் தேதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என ஹரியானா மாநில அரசு அறிவிப்பு. ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 11ம் தேதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஹரியானா போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்று ஹரியானா … Read more

வாசனை திரவிய விளம்பரத்தை நீக்க ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவு!

வாசனை திரவிய விளம்பரத்தை கைவிடுமாறு ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களை ஐ&பி அமைச்சகம் உத்தரவு. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஊக்குவிக்கும் வகையிலான, வாசனை திரவிய பிராண்டின் விளம்பரத்தை உடனடியாக நீக்க ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வாசனை திரவிய விளம்பரம் தொடர்புடைய நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், பாலியல் குற்றங்களை ஊக்குவிக்கும் வகையிலான, … Read more

பெண்களுக்கே அதிக வாய்ப்பு – ஆண் தேர்வர்கள் புகார்

இட ஒதுக்கீட்டிலும் பெண்கள் அதிகளவில் பலனடைவதால் ஆண்களுக்கான வாய்ப்பு பறிபோவதாக புகார். தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில் தொடங்கி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் tnpscgroup2 தேர்வுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது. 5,529 காலிப்பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உளப்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் குருப் 2 தேர்வு எழுதினர். Group 2 / 2A தேர்வுக்கு இந்த முறை ஆண்களை விட பெண்கள் … Read more

சட்டபூர்வமான கருக்கலைப்புக்கு அனுமதி அளித்த மூன்று நாடுகள்!இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என்று 1973-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த மைல்கல் ரோ வெர்சஸ் வேட் முடிவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் வரைவு அறிக்கை தயார் செய்து வருவதாக கூறப்படும் ஆவணம் ஒன்று நேற்று அமெரிக்காவில் கசிந்தது.இது அமெரிக்க பெண்கள் மற்றும் சமூகநலச் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கோபத்தை தூண்டியது.இதனால்,பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் செய்தி அமெரிக்க கருக்கலைப்புச் சட்டங்களை மத்திய கிழக்கில் உள்ள சட்டங்களுடன் … Read more

டெல்லியின் மிக பெரிய மருத்துவமனைகளில் மாதந்தோறும் பிரசவத்திற்கு பின் 16 பெண்கள் இறப்பு..!

டெல்லியில் உள்ள நான்கு பெரிய அரசு மருத்துவமனைகளாகிய எய்ம்ஸ், ராம் மனோகர் லோகியா, சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் சுசேதா கிரிப்லானி ஆகிய  4 மருத்துவமனைகளிலும் ஒவ்வொரு மாதமும் பிரசவத்திற்கு பின் 16 பெண்கள் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 4 மருத்துவமனைகளிலும் ஜனவரி 2015 முதல் செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு  பிரசவத்திற்கு பின்பு 1281 பெண்கள் பிரசவத்திற்கு பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் பெண்களின் பிரசவத்திற்கு பின் ஏற்படும் உயிரிழப்புக்கு, அதிக ரத்தப்போக்கு, … Read more

மகளிர் குழுக்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் ரத்து – அரசாணை வெளியீடு…!

மகளிர் குழுக்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் ரத்து செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆணையில், 13.08.2021 அன்று தாக்கல் செய்த திருத்த வரவு செலவு திட்டம் 20212022 இல், “கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். கடன் வழங்குவதற்கு ஏதுவாக இச்சங்கங்களுக்கு பல்வேறு கட்டங்களில் நிதிநிலை வழங்குவதற்கான நடைமுறையை அரசு வகுக்கும். இதற்காக 600 கோடி ரூபாய் … Read more