24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக  தெரிவித்துள்ளது.  வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றின் வேகம் மற்றும் திசை மாறுபாடு காரணமாக ஒருசில இடங்களில் மழை பதிவாகியுள்ளதாகவும், இதே காரணத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 … Read more

மார்ச் 23ம் தேதி-உலக வானிலை தினம்…!!

வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. “வாழ்க்கையையும் பொருட்களையும் பாதுகாக்க வானிலையை கண்காணிப்போம்’ என்பது இந்தாண்டு இதன் மையக்கருத்தாக உள்ளது. தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி,மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது… தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது இதில் வளரும் … Read more

அமெரிக்காவில் புதிதாகப் பெய்த பனிப்பொழிவால் பொதுமக்கள் உற்சாகம்!

மக்கள் அமெரிக்காவில் பனிப்பொழிவு தொடங்கிய நிலையில் புதிதாகப் பெய்த பனியால்  உற்சாகம் அடைந்தனர். வாஷிங்டனில் உள்ள வணிக வளாகத்தின் திறந்தவெளி அரங்கில் பெய்த பனியை ஆண்களும் பெண்களும் பந்துகளாக சுருட்டி ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடி மகிழ்ந்தனர். யாருக்கும் காயம் ஏற்படுத்தாத இந்த பனிப்போர் யாரையும் பார்வையாளர்களாக விட்டுவைக்காமல் எல்லோரையும் பங்கேற்க வைத்து விட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் பச்சை நிறத்தில் தண்ணீர்!அதிர்ச்சியில் விவசாயிகள், பொதுமக்கள் ….

விவசாயிகளும், பொதுமக்களும்கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரி ஆற்றில் பச்சை நிறத்தில் தண்ணீர் வருவதால்  அதிர்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளிலிருந்து திறந்து விடப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் திறந்துவிடப்படுவதால் நிற மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  கழிவுடன் கூடிய தண்ணீர் விளைநிலங்களுக்கு பாய்ச்சப்பட்டால் விளைநிலங்கள் பாழாகும் நிலை ஏற்படும் என்றும், குடிநீராக பயன்படுத்தப்படுத்தவும் காவிரி நீர் தகுதியற்றதாக மாறியுள்ளதாகவும் விவசாயிகளும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு … Read more

ஜெர்மனியின் பெர்லின் நகரில் கடும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு!

கடும் பனிப்பொழிவு காரணமாக ஜெர்மனியின் பெர்லின் நகரில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தின் தாக்கம் சற்றே குறைந்து இருந்த தருவாயில் தற்போது வானிலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றம் காரணமாக மீண்டும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. சாலைகள் பனிப்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது.  மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

எச்சரிக்கை!சாதாரண சிகரெட்டுகளைப் போலவே இதுவும் ஆபத்து….

மருத்துவ ஆய்வாளர்கள் ஈ-சிகரெட் எனும் மின்னணு சிகரெட்களும் கல்லீரலை பாதிக்கக் கூடியவையே என  எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள சார்லஸ் ஆர்.ட்ரூ (( Charles R. Drew )) மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழக தலைமை எழுத்தாளரான தியோடர் சி ஃபிரைட்மேன் ((Theodore C. Friedman)) உள்ளிட்ட ஆய்வாளர்கள் எலிகளைக் கொண்டு இதற்கான சோதனையை நடத்தினர். அதில் ஈ-சிகரெட் எனும் மின்னணு சிகரெட்களின் புகையை சுவாசித்த எலிகளின் கல்லீரல்களில் அதிக கொழுப்பு படிந்திருந்ததைக் கண்டறிந்தனர். 12 வார … Read more

மணிக்கு 120கி.மீ. வேகத்தில் புயல் தாக்கியதால் மடகாஸ்கர் நாட்டில் கடும் பாதிப்பு!

புயலாலும் மழைவெள்ளத்தாலும் மடகாஸ்கர் நாட்டின் கிழக்குப் பகுதியில் 17பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்கே இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவு நாடு மடகாஸ்கர். இந்த நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை நேற்று எலியாகிம் என்கிற புயல் தாக்கியது. மணிக்கு 120கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசியதுடன் பலத்த மழையும் பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தாழ்வான பகுதிகளில் இருந்த ஆறாயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான வேறிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல், மழை, வெள்ளம் … Read more

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக  தெரிவித்துள்ளது. கேரள கடற்பகுதி மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாகவும், கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேகம் மற்றும் திசை மாறுபாடு காரனமாகவும் தமிழகத்தில் மழைப் பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் உதகையில் 5 செண்டி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையத்தில் 4 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி … Read more

மார்க்கஸ் என்ற புயல் மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லேவை புரட்டிப் போட்டது!

மார்க்கஸ் என்ற புயல்  மேற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரமான கிம்பர்லேவை புரட்டிப் போட்டது. டைமர் கடல் பகுதியில் உருவாகி, மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய மார்க்கஸ் புயலால் மரங்கள் வேரோடு தூக்கி வீசப்பட்டன. வீடுகளின் மேற்கூரைகள், மின்கம்பங்கள் ஆகியவை முற்றிலும் சேதமடைந்தன. புயலைத் தொடர்ந்து கிம்பர்லே பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அவசரகால பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கோவில்பட்டியில் பலத்த இடி, மின்னலுடன் மழை…!!

  கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இன்று காலையில் பலத்த வெயில் அடித்தாலும், மதியத்திற்கு மேலாக வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து பலத்த இடி,மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.தொடர்ந்து சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததது. இந்த மழையினால் கோவில்பட்டி புதுரோடு, மார்க்கெட் சாலைகளில் மழைநீர் வெள்ளபோன்று போனதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.