திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் தமிழை அழித்திருப்பார்கள் – அமைச்சர் பொன்முடி

விருப்பப்படுவோர் இந்தியை கற்கலாம் என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழா விழுப்புரம் சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பவர்கள் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும் என்பதால் வருகின்ற ஆண்டில் இருந்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் கட்டாயம் தமிழ் மொழி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் எப்பொழுதோ … Read more

செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு விற்கப்பட்ட ஆடுகள்..!

விழுப்புரம் செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று சந்தை நடைபெறும். இந்த சந்தையில் வேலூர், தர்மபுரி, ஆம்பூர், பெங்களூர், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல வியாபாரிகள் இங்குள்ள சந்தையில் விற்கும் ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். தற்போது பக்ரீத் பண்டிகை நெருங்கி கொண்டிருப்பதால் இந்த வாரச்சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு பெங்களூர், சேலம், திருவண்ணாமலை, வேலுர், தருமபுரி, சென்னை போன்ற பல பகுதிகளிலிருந்து … Read more

சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்..!வேஷ்டியை கிழித்து முதலுதவி செய்த திமுக எம்.எல்.ஏ..!

சாலை விபத்தில் கால் முறிவுற்ற நிலையில் வலியால் துடித்த இளைஞருக்கு தனது வேஷ்டியை கிழித்து திமுக எம்.எல்.ஏ. ஆன மருத்துவர் முதலுதவி செய்துள்ளார். பனங்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெயக்குமார். இவர் விழுப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த பொழுது ராகவன்பேட்டை எனும் இடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கால் முறிவுற்று வலியால் துடித்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்றுகொண்டிருந்த விழுப்புரம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் வலியால் துடித்த இளைஞரை கண்டுள்ளார். உடனே … Read more

#Breaking : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்.!

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிபெற்றவர் பி.கிருஷ்ணன். இவர் நேற்று மாலைகாலமானார். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது நடைபெற்ற  முதல் தேர்தலில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானவர் பி.கிருஷ்ணன். இவர் தற்போது எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து வந்துள்ளார். வயது முதிர்வின் காரணமாக கட்சி பணிகளில் இருந்து விலகி இருந்துள்ளார். இந்நிலையில் 86 வயதான பி.கிருஷ்ணன் வயது முதிர்வின் காரணமாக நேற்று மாலை (சனிக்கிழமை) உயிரிழந்தார். … Read more

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு..!

விழுப்புரத்தில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் எனவும், உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்படும் என வர்த்தக சங்கம் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தற்பொழுது மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு … Read more

சிறுமி ஜெயஸ்ரீ கொலை.! சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி மனு தள்ளுபடி.!

ஜெயஸ்ரீ  கொலை வழக்கில் சிபிஐ விசாரிக்கக்கோரி  உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமதி என்பவர் மனுதாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மே 10-ஆம் தேதி ஜெயபால் வீட்டுக்குள் நுழைந்த அதிமுக நிர்வாகி முருகன் மற்றும் அதிமுக கிளை செயலாளர்  கலியபெருமாள் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தெ ஜெயஸ்ரீயை  கட்டிப்போட்டுபெட்ரோல் ஊற்றி தீ … Read more

வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளை முயற்சி.!

விழுப்புரம் அருகே இந்தியன் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். விழுப்புரம் முண்டியம்பாக்கம் எனும் ஊரில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் காலை வழக்கம் போல ஊழியர்கள் வேலைக்கு சென்றனர். அப்போது அங்குள்ள ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருந்தன. இதனை கண்டு பதறிய ஊழியர்கள் உடனே இந்த கொள்ளை முயற்சி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் … Read more

புதுச்சேரி எல்லைகளில் குழப்பம்.! இரு மாவட்ட ஆட்சியர்கள் தீவிர சோதனை.!

புதுசேரி மாவட்ட எல்லைக்குள் கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகள் சில இருப்பதால், அந்த மாவட்ட மக்கள் வருவதை தடுக்க புதுச்சேரி அரசு முயன்று வருகிறது.  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் புதுசேரியில் தற்போது வரையில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.   ஆனால், புதுசேரி மாவட்ட எல்லைக்கு அருகில் இருக்கும் விழுப்புரம், … Read more

கோயம்பேடு சந்தை மூலமாக விழுப்புரத்தில் இன்று 25 பேருக்கு கொரோனா.!

கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்தடைந்தவர்களின் இன்று மட்டுமே 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தை தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மையமாக மாறி வருகிறது. கோயம்பேடு சந்தை மூலமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.  இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்தடைந்தவர்களின் இன்று மட்டுமே 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை  கோயம்பேடு சந்தை மூலமாக விழுப்புரத்தில் 111 பேருக்கு கொரோனா … Read more

மதகு உடைந்து வெளியேறிய தண்ணீர்! மணல் மூட்டைகளை வைத்து பெரிய பாதிப்பை தடுத்த இளைஞர்கள்!

விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது பெரிய ஏரி. இந்த ஏரியின் முழு கொள்ளளவையும் எட்டி, அதன் மதகு ஒன்று உடைந்து விட்டது. அதனை மணல் மூட்டைகளை வைத்து இளைஞர்கள் தண்ணீர் கசிவை தடுத்து நிறுத்தினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்து உள்ள சத்தியமங்கலம் எனும் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தனது முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஏரி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. … Read more