குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்த தடை.. மீறினால் 200 அபராதம்!

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள பன்சி என்ற கிராமத்தில், போதைப் பழக்கத்தை காரணம் காட்டி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நவம்பர் 11ம் தேதி கிராம சபையில் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தடை உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ 200 அபராதம் விதிக்கப்படும் என்று கிராம சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். கொரோனா காலத்தில் அதிகப்படியான … Read more

புலியிடமிருந்து தனது 15 மாத மகனை கைப்பற்றிய தாய்!

மத்தியப் பிரதேசத்தில் புலியை எதிர்த்துப் போராடி தனது 15 மாத மகனைக் காப்பாற்றிய தாய். தாய்மார்கள் தன் குழந்தையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லவும் தயாராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், மத்தியப் பிரதேச கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புலியிடமிருந்து இருந்து தனது 15 மாத மகனைக் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை, மத்தியப் பிரதேச கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சனா சௌத்ரி என்ற பெண், தனது மகன் ரவிராஜை வயலுக்கு அழைத்துச் சென்றபோது, ​​இந்த … Read more

#Viral video: அறிய சூறாவளி காற்றால் விவசாய நிலங்கள் சேதம்

மத்தியப் பிரதேசத்தில் அரிய சூறாவளியால் விவசாய நிலங்கள் நாசம். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் ஒரு அரிய சூறாவளி விவசாய நிலத்தை நாசம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல். “இயற்கை எல்லாவற்றையும் ஒரு நொடியில் அழித்துவிடும்” என்று ஒரு சமூக ஊடக பயனர் வீடியோவில் கருத்து தெரிவித்துள்ளார். “இது பயமாக இருக்கிறது” என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.   View this post on Instagram   A post shared by Hindustan Times (@hindustantimes)

#BREAKING : ‘விவசாயிகளுடன் ஒருநாள் திட்டம்’ – முதல்வர் அறிவுறுத்தல் – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

விவசாயிகளுடன் ஒருநாள் திட்டத்தின்கீழ் ஓராண்டில் 2,500 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவையில், மாதம் ஒருநாள் எம்எல்ஏக்கள் ஒரு கிராமத்திற்கு சென்று கருத்து கேட்க முதல்வர் வலியுறுத்தியுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அந்த வகையில், விவசாயிகளுடன் ஒருநாள் திட்டத்தின்கீழ் ஓராண்டில் 2,500 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், அங்கு சென்று விவசாயிகளின் கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

ஒரே கிராமத்தில் 44 பேருக்கு தொற்று உறுதி…! 12 மணி நேரம் காத்திருந்த நோயாளிகள்…!

நீலகிரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஒரே கிராமத்தில் 44 பேருக்கு தொற்று உறுதி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுபடுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட, எஸ் எஸ் நகர் பகுதியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 44 … Read more

இந்தியாவில் கொரோனா வைரஸ் எட்டிப்பார்க்காத கிராமமா ?…இது தான் காரணம்

இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் வாட்டி வதைக்கும் இந்த தொற்று கிருமி, இந்தியாவிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவின் ஒரு கிராமத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை என்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் கோசகுமுடா பகுதியில் உள்ள பலேங்கா கிராமத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. இந்த கிராமம் சத்தீஸ்கர் பகுதிக்கு அருகில் உள்ளது. இங்கு … Read more

வேகமெடுக்கும் கொரோனா..! ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

கிராமம் முழுவதையும் தடை செய்யப்பட்ட பகுதியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க அரசு அதிகாரிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அசோக் நகர் மற்றும் நாராயணன் நகர் போன்ற பகுதிகளில் உள்ள தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனை தொடர்நது,  நிலக்கோட்டை அருகேயுள்ள ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில்  கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அந்த … Read more

பெண்கள் நலனுக்கான திட்டங்கள் அதிகம் நிறைவேற்றப்பட்டது திமுக ஆட்சியில் தான் – மு.க.ஸ்டாலின்!

திமுக ஆட்சியில் தான் பெண்கள் நலனுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே அவளிவணல்லூரில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வரும் ஸ்டாலின் அவர்கள் அண்மையில் மக்கள் மத்தியில் பேசிய போது தமிழகத்தில் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும், நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா எனவும் கலகலப்பாக பேசியுள்ளார். அதன் பின் பேசிய அவர், திமுக ஆட்சியில் தான் பெண்கள் நலனுக்கான … Read more

இளம் பெண்ணை கடத்தி தலை முடி அறுக்கப்பட்டு, கையில் சூடு போட்டு சித்ரவதை செய்த மர்மநபர்கள்.!

தூத்துக்குடியில் மர்மநபர்கள் சிலர் கடத்திச் சென்றதாகவும், பின்னர் செட்டியாபத்து கிராமத்தில் உள்ள வீட்டின் முன்பு விட்டுச் சென்றதாகவும் தெரிகிறது. பின்னர் கண் திறக்க முடியாமல் சோர்ந்த நிலையில் காணப்பட்ட பெண், தலை முடி அறுக்கப்பட்டு, கையில் சூடு போட்ட காயங்களுடன் காணப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தை சேர்ந்த கணவன் சக்திவேல், மனைவி வசந்தா இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சக்திவேலை விட்டுப்பிரிந்த வசந்தா திருப்பூரில் தனியாக வசித்து வருகிறார். சக்திவேலின் ஒரு … Read more

அதிர்ச்சி சம்பவம்.! சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.!

கர்நாடக மாநிலத்தில் சூரிய கிரகணம் நடைபெறும் போது மாற்றுத் திறனாளி குழந்தைககளை கழுத்து வரை மண்ணில் புதைத்த அதிர்ச்சி சம்பவம். இவ்வாறு புதைத்து வைத்தால், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடு சரியாகிவிடும் என்ற மூடநம்பிக்கை. அரிய நிகழ்வான வளைய வகை சூரிய கிரகணம் இன்று பல இடங்களில் நிகழ்ந்த நிலையில், கர்நாடக மாநிலம் தாஜ்சுல்தான்பூர் கிராமத்தில் சூரிய கிரகணத்தின் போது சஞ்சனா, பூஜா மற்றும் காவிரி ஆகிய மூன்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் கழுத்து வரை புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை … Read more