வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது… பிரதமர் மோடி பேச்சு!

pm modi

PM Modi  : இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தமிழகம் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதுபோன்று பல்வேறு முடிவுற்ற திட்டங்களையும் காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர், தூத்துக்குடியில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டி வைத்தார். Read More – குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..! அதேசமயத்தில், தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் … Read more

தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

pm modi

Narendra modi : மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக நேற்று பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடக்கத்துக்கு வந்தார். அங்கு நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மதுரை சென்ற பிரதமர், கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு, மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார். நேற்று இரவு மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கிய … Read more

தவெக கட்சியில் இருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நீக்கம்!

Tamilaga Vettri Kazhagam

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பார் என நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியது. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில், இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல அரசியல் பலம் தேவை என்பதற்க்காக கட்சி தொடங்குவதாக விஜய் தெரிவித்தார். ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் … Read more

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயரை வைக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்பரிந்துரை

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயரை வைக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்துள்ளார். இதோடு தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதையடுத்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான … Read more

கொந்தளிக்கும் அலை: தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.!

Tuticorin - fishing

தூத்துக்குடியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடைவிதித்துள்ளது. வானிலை அறிவிக்கையின் படி, கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு … Read more

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீடு..!

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு  நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடர்ந்து பல்வேறு வகையான முதலீடுகள் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டின் மூலம் 5 லட்சம்  கோடி முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான  வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் தனது ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த மின்சார … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் ரகுபதி

Ragupathi

கடந்த 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில்,  பின் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம்  விசாரணை மேற்கொண்டது. இதன்பின் இந்த ஆணையம், தனது விசாரணை … Read more

தூத்துக்குடியில் 135 கிலோ குட்கா கடத்தல்.! 5 பேர் கைது.! லாரி பறிமுதல்.!

தூத்துக்குடியில் 135 கிலோ குட்காவை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கண்டெய்னர் லாரி மற்றும் இருசக்கர வாகனங்களும் கைது செய்யப்பட்டுள்ளது.  குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவை தமிழகத்தில் பல்வேறு கடைகளில் சட்டவிரோதமாக விறக்கப்பட்டு தான் வருகிறது. அதனை தடுக்க அரசு பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து சட்டவிரோதமாக கடத்தப்படும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது. அப்படி தான், … Read more

Rain Breaking: கரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயல் எதிரொலியாக ஏற்கனவே 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்க்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர்,காவேரிப்பட்டினம்,மத்தூர்,ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாண்டஸ் புயல் எதிரொலியாக ஏற்கனவே 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, … Read more

போராளிகளுக்கு வீரவணக்கம் – தமிழகத்தின் கருப்பு நாள் இது : கனிமொழி எம்.பி

உயிரிழந்த தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம் என கனிமொழி எம்.பி ட்வீட்.  தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக,கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து  அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடியில் தங்கள் மண்ணுக்காகவும், … Read more