தமிழ் இடம்பெறாமல் இருப்பது ஏற்புடையதல்ல – தினகரன்

மத்திய அரசு அளித்திருந்த வாக்குறுதியின்படி தமிழிலும் அஞ்சல் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். அஞ்சல்துறைக்கான அக்கவுன்டன்ட் பதவிகளுக்கான தேர்வு வரும் பிப்ரவரி 14 -ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தது.எனவே அடுத்தமாதம் நடைபெறவுள்ள அஞ்சல்துறைக்கான தேர்வு அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அஞ்சல்துறைக்கான மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம் பெற்றுள்ளது.இதனால்அஞ்சல்துறை தேர்வுகளை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது … Read more

அஜித், ஜோதிகா, பார்த்திபன், தனுஷ், அனிருத் ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு!

அஜித், ஜோதிகா, பார்த்திபன், தனுஷ், அனிருத் ஆகியோருக்கு டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்திய அளவில் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கான தாதா பால்கே விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் திரையுலகை சேர்ந்த அன்புக்குரிய அஜித்குமார், பார்த்திபன், தனுஷ், ஜோதிகா, அனிருத் ஆகியோருக்கு எனது பாராட்டுகள் என்று அம்மா முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், திரைத்துறையில் தமிழகம் பெருமைபடத்தக்க மேலும் பல சாதனைகளை … Read more

அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்- தினகரன்

தமிழக அரசு மனிதநேயத்துடனும் மனசாட்சியோடும் நடந்து கொள்ள வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்த்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று கோரி போராடிய போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பிய அரசு … Read more

தமிழ் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு – இரங்கல் தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள்.!

தமிழ் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு அரசியல் தலைவர்களான கமல்ஹாசன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர். தமிழ் பதிப்புத் துறையில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியவர் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார் மரண படுக்கையிலும் சுவாச கருவி பொருத்தியவாறு அவர் தனது க்ரியா அகராதியின் திருத்தப்பட்ட 3-ம் பதிப்பினை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு … Read more

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் துணை அதிபரான கமலா ஹாரிஸிற்கு வாழ்த்துக்கள்-டிடிவி தினகரன்.

அமேரிக்கா அதிபர் தேர்தலில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸிற்கு டிடிவி தினகரன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலானது கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது . அதில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானதை அடுத்து ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து டிடிவி தினகரன்.!

பள்ளிகள் திறக்கப்படுவதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனநிலையையும் ,கொரோனா தாக்கம் குறித்த உண்மை நிலையையும் உணர்ந்தே முடிவெடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவித்த நிலையில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதிலும் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அமமுக பொது செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான … Read more

திட்டமிடாமல் பணிகளை செய்ததால் இடித்து தள்ளப்பட்டதா? தினகரன்

மக்களின் சந்தேகங்களுக்கு பழனிசாமி அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.  நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.336 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. இதனிடையே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதி கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்தது.இதனால் 5 தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது. இதனிடையே அமைச்சர் தங்கமணி மருத்துவமனை கட்டும் பணியை ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்பொழுது … Read more

போதிய அக்கறை காட்ட வேண்டும் – தினகரன்

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பெண்கள் 5 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பட்டாசு ஆலையில்ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,விருதுநகர் மாவட்டம் செங்குளம் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பெண்கள் 5 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வருத்தமளிக்கிறது. பலியானவர்களின் … Read more

மதுரை மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும் – டி.டி.வி தினகரன்.!

மதுரை மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும் என டி.டி.வி தினகரன் கோரிக்கை. மதுரையிலும் இன்று நள்ளிரவு முதல் 7 நாள்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப் பகுதிகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ஊரகப் பகுதிகளிலும் முழு முடக்கம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும் மதுரை அம்மா உணவகங்களில் … Read more

தமிழக வீரர் பழனி வீரமரணம் ! ஸ்டாலின் ,தினகரன் இரங்கல்

லடாக்கில் நடைபெற்ற மோதலில் தமிழக வீரர் பழனி வீரமரணம் அடைந்த நிலையில் ஸ்டாலின் ,தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.இதில் உயிரிழந்த வீரரில் ஒருவர், தமிழகத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர், ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more