எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் !சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம்

தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு, புதுச்சேரி,கேரளா ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களை கொண்டு இயங்கி வருகிறது. ஜூலை 1ஆம் தேதி காலை 6 மணி முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம் என்று எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது. விடுபட்ட லாரிகளுக்கும்,பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வணிக ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தது எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம். இதனையடுத்து போராட்டத்திற்கு தடைவிதிக்க … Read more

4 டயர்களுடன் இயங்கும் அரசு பேருந்து! பொதுமக்கள் அதிர்ச்சி!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து நேற்று திருப்பூருக்கு சென்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று ஆறு டயர்களுக்கு பதிலாக நான்கு டயர்களுடன் இயங்கியுள்ளது. இதனையடுத்து, அந்த பேருந்துக்கு பின்னால் காரில் சென்ற ஒருவர் அதனை வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://www.facebook.com/thangavel.subramaniam.71/videos/915052598840225/ பொதுமக்களை ஏற்றி செல்லும் அரசு பேருந்துகள், கவனமற்ற முறையில் இயக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக … Read more

#NZvAUS : டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு

உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் இரண்டாவது  போட்டியில் நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இப்போட்டி  லண்டனில்  உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது . இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம் : ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், … Read more

அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ளலாம் – அதிமுக தலைமை அனுமதி

அண்மையில் அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது ,ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்து பெறும் பரபரப்பை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியது. இதனால் ஒற்றைத்தலைமை குறித்து கட்சியினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு  ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.அதில்,அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது. ஒற்றை தலைமை விவகாரத்தை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் ஊடகங்களில் கருத்து … Read more

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வியாபாரியின் அதிரடி ஆ ஃபர்! 1கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலவசம்!

பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது அந்த வகையில், சென்னையிலும் இந்த வருடம் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தண்ணீருக்காக மக்கள் அலைந்து திரிவதை கண்டா மாவு கடை வியாபாரி ஒருவர், அதிரடியாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். எல்லம்மன் மாவு கடை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, தண்ணீருக்காக சென்னை மக்கள் படும் அவதிகளை கருத்தில் கொண்டு, ” ஒரு கிலோ மாவு வாங்கினால், ஒரு குடம் தண்ணீர் இலவசம்”  என்ற அறிவிப்பு பலகையை வைத்துள்ளார். இவரது அறிவிப்புக்கு … Read more

ராகுல் தலைவர் பதவியில் தொடர வாய்ப்பே இல்லை -வீரப்ப மொய்லி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் தோல்வியடைந்தார். இருந்தாலும் கேரளா வயநாட்டில் முதன்முதலாக போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று செய்தி அதிகம் உலாவி வந்தது.மேலும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் பதவியை ராஜினாமா … Read more

தன்மானத்தை இழந்து அதிமுகவில் சேர விரும்பவில்லை-திமுகவில் இணைந்த பின்னர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

தன்மானத்தை இழந்து அதிமுகவில் சேர விரும்பவில்லை என்று திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில்  தங்க தமிழ்ச்செல்வன் இணைந்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளது. அதை ஏற்று நான் திமுகவில் இணைந்துள்ளேன்.மாற்றான் தோட்டத்து மல்லிக்கைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் கொள்கையை கடைப்பிடிப்பவர் மு.க.ஸ்டாலின்.அதிமுகவில் இருந்த பலரும் திமுக வந்த … Read more

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்தார் தங்க தமிழ்செல்வன் .டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்தார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? … Read more

biggboss 3: இவளோட போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது! எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிகாபஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 3 வைத்து சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் பல சுவாரசியமான சம்பவங்களும், கண்கலங்கும் சம்பவங்களும் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதாவுக்கு, மீராவுக்கும் இடையில் ஏற்படும் வாய் தகராறில், மீரா கலங்குகிறார். இதனை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. … Read more

biggboss 3: யாருமே விட்டுக்கொடுக்க மாட்டாங்க, என்னோட மனைவி விட்டு கொடுத்தா! கண் கலங்கும் பிக்பாஸ் பிரபலம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வகிக்கும் பிகாபஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போகப்ஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்குநாள் பல சுவாரசியங்கள், கவலைகள், மோதல்கள் என பல விஷயங்கள் இடம் பெறுகிறது. அந்த வகையில், பிக்பாஸ்  கொண்டுள்ள சரவணன் தனது முதல் மனைவி குறித்து உருக்கமாக சொல்லி கண்ணீர் விடுகிற வீடீயோவை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ, … Read more