சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 18ஆம் தேதியான நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நாளை காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி … Read more

தீபாவளி பண்டிகை: நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ சேவை இயக்கம்!

Metro Train

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு மெட்ரோ இரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, 9,10,11 ஆகிய தேதிகளில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட்டிக்கப்பட்ட நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி … Read more

திருவண்ணாமலை தீபத்திருவிழா – 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் இயக்கம். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது, கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து … Read more

தண்டவாளத்தில் இருந்து தடம் இறங்கிய ரயில்.! திருச்சி ஜங்க்சனில் பரபரப்பு.!

திருச்சி ஜங்ஷனில் எஞ்சின் சோதனை ஓட்டத்தின் பொது தண்டவாளத்தில் இருந்து தடம் இறங்கியதால் அந்த வழியாக செல்ல இருந்த மற்ற ரயில்களின் நேரமும் தாமதமானது.   திருச்சி ஜங்க்சனில் ரயில் எஞ்சின் ஒன்று பரிசோதனைக்கு தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. அப்போது ஜங்க்சனில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் அந்த எஞ்சின் தண்டவாளத்தில் இருந்து தடம் இறங்கிவிட்டது. அந்த இருப்பு பாதையானது, திருச்சியில் இருந்து மதுரை, ராமேஸ்வரம் , புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பாதை என்பதால் அந்த வழியாக செல்லும் … Read more

ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை..!

ரயில்களில் பட்டாசு அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.  பண்டிகை சீசன் நெருங்கி வருவதையடுத்து ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் தடை வித்துள்ளது. தடையை மீறி பட்டாசு அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் யாராவது பட்டாசு கொண்டு … Read more

இன்று முதல் நடைமேடை கட்டண உயர்வு அமல்…!

இன்று முதல் நடைமேடை கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.  சாதாரணமாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 1 முதல் ஜனவரி 31, 2023 வரையில் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் … Read more

ரயிலில் கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டு சிறை.. ரயில்வே காவல்துறை எச்சரிக்கை!

கத்தியுடன் ரயிலில் சென்று அச்சுறுத்தினால் இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 153-ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை. ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணம் செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார ரயில்களில் அட்டூழியம் செய்யும் மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார ரயிலில் தொங்கியபடி தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. சென்னை – திருத்தணி மின்சார ரயிலில் அட்டூழியம் செய்த மேலும் ஒரு … Read more

இந்த மாவட்டத்தில் இன்று முதல் இரண்டு நாட்கள் ரயில் சேவை ரத்து…!

சேலம் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 20, 21-ஆம் தேதிகளில், பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் இயக்கப்படாது.  சேலம் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 20, 21-ஆம் தேதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை எடுத்து இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் சேலம் – கரூர், கரூர் – சேலம் இடையே இரு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

#Viral:பார்சலை டெலிவரி செய்வதற்காக ரயிலின் பின்னால் ஓடிய டெலிவரி பாய்!!

டன்சோ டெலிவரி பாய் பார்சலை வழங்குவதற்க்காக நகரும் ரயிலின் பின்னால் ஓடும் வீடியோ வைரலாகிறது. ரயிலின் வாசலில் நிற்கும் பயணிக்கு ஆர்டர் செய்த பார்சலை வழங்குவதற்காக ஓடும் ரயிலின் பின்னால் ஓடும் டன்சோ டெலிவரி பாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பார்சலை வழங்குவதற்காக டெலிவரி பாய் ஓடுவதையும், அதனை வெற்றிகரமாகப் பெற்ற பிறகு வாடிக்கையாளர் கொண்டாடுவதைக் காணலாம். சமூக ஊடக பயனர்கள் இந்த சம்பவத்தை தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கேயின்(DDLJ 2) கிளைமாக்ஸ் … Read more

இந்த பகுதிக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து – தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே மண்டலத்திலிருந்து பீகார், கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிகளுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் அக்னிபாத் போராட்டங்களால் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.  இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் … Read more