நாவில் சுவையூறும் தக்காளி ஊறுகாய்! ஒருமுறை இந்த மாதிரி செய்து பாருங்க…

tomato

சில காய்களை நம் உணவில் விரும்பி சாப்பிடுவோம். அதுவும் பச்சையாகவும் சாப்பிடுவோம். தக்காளி சேர்க்காத உணவுகளே இல்லை என்றே சொல்லலாம். உணவுகளில் மட்டும் இல்லாமலும் அழகு சாதனங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு அழகான பழம். இந்த தக்காளியை வைத்து நாம் இன்று தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: தக்காளி=1. 1/2 கிலோ கடுகு= ஒரு ஸ்பூன் வெந்தயம்= ஒரு ஸ்பூன் சீரகம்=1 ஸ்பூன் நல்லெண்ணெய் =200 ml புளி =100 கிராம் மிளகாய்த்தூள் … Read more

Face Shining : இந்த இரண்டு பொருட்கள் போதும்..! உங்கள் சருமம் பளபளக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!

facebeauty

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கின்றனர். அதிலும், பெரும்பாலானவர்கள் இயற்கையான முறையில் முகத்தின் அழகை மெருகூட்டுவதை தவிர்த்து, கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி தான் பயன்படுத்துகின்றனர். இதனால், நமது சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கெமிக்கல் கலந்த கிரீம்களை நாம் பயன்படுத்துவதால், உடனடியாக முகம் பளபளப்பானாலும் அதன் பின்பு பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால், நாம் இயற்கையான முறைகளை பயன்படுத்தும் போது, நமக்கு … Read more

தக்காளி விலை கிடுகிடு உயர்வு… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.! ஒரு கிலோ 40, 42.!

தமிழக அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகிறது. தக்காளி விளைச்சல் குறைவு காரணமாக, அதன் விலை வெளிச்சந்தைகளில் உயர்ந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் பகுதி விவசாயிகளிடம் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து, பண்ணை பசுமை கடைகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்து வருகிறது.  அதன்படி, சென்னை, பண்ணை பசுமை கடைகளில் தக்காளி ஒருகிலோ 40 முதல் … Read more

தேர்தலுக்கு பின் முதல் முறையாக வெளியில் சென்ற பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு தக்காளி வீச்சு.., வீடியோ

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் நடைபெற்ற தேர்தலில்  44 வயதான இமானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் அதிபராக 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால், இரண்டாவது முறையாக பிரான்சில் அதிபராக முன்றாவது ஜனாதிபதி எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார். ஆனால், வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இம்மானுவேல் பெரும்பான்மையயை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 63% வாக்காளர்கள் இமானுவேல் மக்ரோனை விரும்பவில்லை என … Read more

தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை ….!

தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் தக்காளி வரத்து குறைவால் கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் கேரளாவிலும் தற்பொழுது தக்காளியில் வரத்து குறைந்துள்ளதால், … Read more

கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு…!

கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு. தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டுவந்து இறக்குவதற்கு லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி  குழுமத்திற்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பேரில் இன்று காலை 4 மணி முதல் அடுத்த  நான்கு வாரத்திற்கு தக்காளி லாரிகளை அந்த … Read more

120 உழவர் சந்தைகளை திறக்க முடிவு – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  !

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 120 உழவர் சந்தைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  தொடர் மழை காரணமாக தமிழகம் முழுவதும் காய்கறிகளின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி 120 ருபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், வருகிற நாட்களில் 120 … Read more

#BREAKING: கூட்டுறவுத்துறை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை-அமைச்சர் ஐ.பெரியசாமி..!

பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை. இது குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து  குறைந்து, விலை உயர்ந்து வருவதால், அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக டியுசிஎஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 2 நகரும் பண்ணை பசுமை … Read more

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்!

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளதுடன், தமிழகத்தில் தக்காளி விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆந்திராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தக்காளி … Read more

இல்லத்தரசிகள் ஷாக்..! ஒரு கிலோ தக்காளி ரூ.130..!

கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சமீப நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை … Read more