TNBudget 2024 Live : தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேரலை நிகழ்வுகள்….

tn budget 2024

கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது . அதற்கடுத்து 2 நாள் கூட்டத்தொடர் , கடந்த வியாழன் அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையுடன் கடந்த வார கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து இன்று தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இன்றைய தமிழக நிதிநிலை அறிக்கையில், சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல … Read more

#Breaking:ஊரகப்பகுதிகளில் “நமக்கு நாமே திட்டம்”;ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!

தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் “நமக்கு நாமே” திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை உட்பட அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் ‘நமக்கு நாமே திட்டம்‘ செயல்படுத்துவதற்கான அரசாணையை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து,ஊரகப்பகுதிகளில் ரூ.100 கோடியில் கலைஞரின் நமக்கு நாமே திட்டம் மீண்டும் துவக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் 2021-2022 … Read more

#TNAgriBudget2022: வேளாண் பட்ஜெட்டில் எவற்றுக்கெல்லாம் எத்தனை கோடி ஒதுக்கீடு! இதோ உங்களுக்காக!

2022-23-ஆம் ஆண்டுக்கான வேளாண்மைக்கென தனி பட்ஜெட்டை இரண்டாவது முறையாக வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் வேளாண்மை மற்றும் விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் என முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விவசாயம் சார்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திமுக அரசு தாக்கல் செய்யும் முதல் முழுமையான வேளாண் பட்ஜெட் இது என்பதாகும். தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23 – எவற்றுக்கெல்லாம் எத்தனை கோடி … Read more

#Breaking:”இனி மாலையிலும் உழவர் சந்தை” – வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு!

2022-23- ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.  அதில்,பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இனி உழவர் சந்தைகள் மாலையிலும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.அந்த வகையில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை மாலையில் செயல்பட அனுமதி வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பொதுவாக,உழவர் சந்தைகள் காலையில் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில்,மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்படவேண்டும் என்று … Read more

பேராசிரியர்கள் பணி நிரந்தரம்? – பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக உள்ள அறிவிப்பு!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து,அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட  545 பேராசிரியர்களின் பணி நிரந்தரத்துக்கான அறிவிப்பு வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக உள்ளதாக தகவல். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து,அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட 545 பேராசிரியர்களை,தற்போது பணியாற்றி வரும் கல்லூரிகளிலேயே நிரந்தரமாக பணியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில்,பேராசிரியர்கள் பணியாற்றி வரும் கல்லூரிகளின் விவரங்களை,அனுப்பி வைக்க கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,வருகின்ற பட்ஜெட் … Read more

திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு 1.50 கோடி நிதி ஒதுக்கீடு…!

திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்ள்ளார். இந்நிலையில், திருநங்கைகள் பயன்பெறும் வண்ணமாக, திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

#BREAKING: வரும் 23-ஆம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்.!

தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். தமிழக 15வது சட்டப்பேரவையின் இருந்து கூட்டத்தொடர் என்பது கடந்த 2-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் சேர்ந்தே நடத்தப்படும் என்று எதிரிபார்க்கப்பட்ட நிலையில், வரும் 23-ஆம் தேதி … Read more

தேர்வுக்குழுவுக்கு அனுப்பவில்லை,எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? ஸ்டாலின் அறிக்கை

வேளாண் மண்டல  மசோதாவை தேர்வுக்குழுவுக்கு  ஏன் அனுப்பவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.   காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,  பழைய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யாத, திருச்சி-கரூர்-அரியலூர் … Read more

#Breaking : 20 ஆம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்.17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.எனவே சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் , தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட் யாருக்கும் ‘பத்தாத பட்ஜெட்’-மு.க.ஸ்டாலின்

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட் யாருக்கும் ‘பத்தாத பட்ஜெட்’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,நிதியமைச்சர் பன்னீர்செல்வத்தின் 10வது பட்ஜெட் எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது.குறிப்பிட்ட சில அமைச்சர்களின் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சியில் கடன் தொகை 3 மடங்கு உயர்ந்துள்ளது.பட்ஜெட்டில் தொலைநோக்கு, வளர்ச்சி திட்டங்கள் இல்லை. … Read more