ஆரம்பித்தது மீன்பிடித் தடைக்காலம்…!!! 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை…!!!

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் மே 29 ஆம் தேதி வரையிலான 45 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக அறியப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலமானது, 45 நாட்களில் இருந்து 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள தடைக்காலத்தால், சென்னை முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு அனுமதியில்லை. எட்டாயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தடைக்காலத்தில் மீனவர்களுக்கு … Read more

8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு

இந்திய பெருங்கடலில் உள்ள நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுவ்ரோஜோதி ராய் அவர்களை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள்…!

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் பற்றியும், எதிர்காலத்தில் புயல் பாதிப்புக்களை உயிர்ச்சேதமின்றி எதிர்கொள்வது பற்றியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ,நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டி.கே.ரெங்கராஜன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் இந்திய கடற்படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுவ்ரோஜோதி ராய் அவர்களை நேரில் சந்தித்து விவாதித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வேண்டும் ; மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள்,விவசாயிகள்,மலைவாழ் மக்கள்,மண்பாண்ட தொழிலாளர்கள் ,சிறு குறு தொழிலாளர்கள், வீடு இழந்தோர், புயலினால் உயிரிழந்தோர் ஆகிய அனைத்துக்கும் வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் குறித்து கோரிக்கை வைத்தார். ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க கப்பற்படை மூலம் தேடுதல் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளேன் எனவும் தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

ஓகி புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர்களுக்கு விளக்கம் அளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

ஒக்கி புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் மீட்பு பணிகளை துரிதபடுத்தவும் கோரியுள்ளார்.

கன்னியாகுமாரிக்கு வராத கடல் விமானம்….???

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று பிரதமர் சபர்மதி ஆற்றிலிருந்து ஒரு கடல் விமானத்தில் இப்போது பறந்து கொண்டிருக்கிறார். இந்த விமானம் தண்ணீரிலிருந்து டேக் ஆஃப் ஆகிப் பறக்கும். 125 கோடி இந்தியர்களுக்கு இந்த விமானம் பயனளிக்கும் என்கிறார் அவர். வளர்ச்சியின் அடையாளமாக இது காட்டப் படுகிறது. அனைத்து டெலிவிஷன் சானல்களும் குதூகலாமாகக் குதித்துக் கொண்டிருக்கின்றன. சில சானல்களில் இதற்கு காங்கிரஸ் என்ன பதில் சொல்லப்போகிறது; இதுதான் வளர்ச்சி என்று கூவிக் கொண்டிருக்கின்றன. கடல் விமானத்தில் … Read more

ஓகி புயல்: இழப்பீடு ரூ.20 லட்சம் போதாது ரூ.50 லட்சம் கொடுக்கனும் ட்விட்டரில் கோரிக்கை வைத்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…!!

ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் போதாது;அந்த நிவாரண தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும்  என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசிடம் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

ஓகி புயல்: உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சமும் ,குடும்பத்தில் படித்த ஒருவருக்கு அரசு வேலை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்து ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் எனவும் மேலும் அவர் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்

ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த 5 தூத்துக்குடி மீனவர்களில் ஒரு மீனவரின் உடல் இறுதிசடங்குக்காக நாளை தூத்துக்குடி வருகிறது….

தூத்துக்குடி:ஒகி புயலில் சிக்கி உயிழந்த தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ஜூடு(வயது 40) என்பவரது உடல் மட்டும் DNA பரிசோதனை மூலம் மட்டும் அடையாளம் காணப்பட்டு,பின்பு பிரேத பரிசோதனை செய்யபட்டுள்ளார்.இறந்த அந்த மீனவரது உடலானது நாளை காலை தூத்துக்குடி வந்தடையும் பின்பு அவருக்கான இறுதிசடங்கு நடைபெறும் அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மீனவர்களின் குடும்பத்தினரால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   முதல்வர் பினராயி விஜியனிடம் போனில் பேச்சுவார்த்தை: இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு … Read more

“எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும்” இலங்கை தமிழ் எம்.பி

“எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும்” ”இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை இலங்கை கடற்படையால் தடுக்க முடியவில்லை” மேலும் அப்படி எல்லையை மீறி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து கடுமையான தண்டனைகளை வழங்க இலங்கை அரசு உத்தரவிட வேண்டும் என வடக்கு மாகாண எம்.பி சரவணபவன் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.