தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் ..!

தூத்துக்குடி மாநகராட்சி 17வார்டு கோவில்பிள்ளை விளை, அய்யார்விளை,பெரியர்நகர்,உள்ளிட்ட அனைத்து தெருக்களுக்கும் லாரி தண்ணீர் வழங்கபட்டு வந்தது தற்போது கடந்த 60நாட்களுக்கு மேலககா லாரி தண்ணீர் வரவில்லை இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கிருஷ்ணம்மாள் Cpmகிளைச்செயலாளர் தலைமையில் நடைபெற்றது.  D.ராஜா Cpmமாநகரச் செயலாளர் K.சங்கரன் Cpm ஒன்றியச் செயலாளர் M.S.முத்து Dyfi மாவட்டச்செயலாளர்  D.கண்ணன் Dyfi மாநகரச் செயலாளர் குமரேசன், சமுத்திரவேல்,அனுதயா, டேனியல்,வேலுச்சாமி,உட்பட கலந்துக்கொண்டனார்

தூத்துக்குடி கோயில் கும்பாபிஷேகத்தில் 74 பவுன் நகை திருட்டு..!

தூத்துக்குடி சிவன் கோயிலில்  14 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்மநபர்கள் பல பெண்களிடம் நகைகளைத் திருடியது தெரியவந்தது. நகையைப் பறிகொடுத்த பெண்கள், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காவல் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தனர். விசாரணையில், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற 14 பெண்களிடம் ஏறத்தாழ 74 பவுன் நகைகள் திருடப்பட்டிப்பது தெரியவந்தது.  இதனிடையே, நகையைப் பறிக்க முயன்றதாக 3 பெண்களைப் … Read more

தூத்துக்குடியில் முதலமைச்சர் வருகைக்கான அலங்கார வளைவுகள் குறித்த புகார்: கோர்ட்டு நியமித்த ஆணையர் ஆய்வு..!

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் ஆறுமுகநயினார் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவரை வரவேற்று தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு இருந்தன. இது குறித்து மக்கள் மேம்பாட்டு கழக அமைப்பாளர் வக்கீல் அதிசயகுமார், சமூக ஆர்வலர் விஜயன் ஆகியோர் மாவட்ட முதன்மை உரிமையியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில், அலங் கார வளைவுகள் சாலைகளை சேதப்படுத்தியும், ஆக்கிரமித்தும் வைக் கப்பட்டு உள்ளன. … Read more

தூத்துக்குடி சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 3-ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி 100 யாக குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கின. இன்று(வெள்ளிக்கிழமை) காலை 3.30 மணிக்கு 4-ம் கால யாகசாலை நடந்தது. அதனை தொடர்ந்து நாடிசந்தானம், ஸ்பர்சாகுதி நடந்தது. காலை 5.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், யாத்ராதானமும் அதன் பின்னர் கடம் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. காலை 6.45 மணி முதல் 7.45 மணி … Read more

கோவில்பட்டியில் பிள்ளையார்நத்தம் கண்மாய் உடைந்து வீணாகும் தண்ணீர் ..!

கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த மழை பெய்தது. இரவு வரை நீடித்த மழையால் நகரிலுள்ள தெருக்களில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இங்கு 56 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகி இருந்தது. பலத்த மழையால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கரைபுரண்டு ஓடிவந்த மழை தண்ணீர் சுமார் 46 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவில்பட்டி பிள்ளையார்நத்தம் கண்மாய் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதிகாலையில் நிரம்பியது. கண்மாயின் கரையில் … Read more

கோவில்பட்டியில் கனமழை:வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளநீர்..!

கோவில்பட்டியில் நேற்று மதியம் 3.50 மணி அளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த பலத்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவில்பட்டி பகுதிகளில் இருந்து மூப்பன்பட்டி கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்கள், ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாராததால், மழைநீர் வழிந்தோட முடியாமல், நகரில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டும் காலம் வந்து விட்டது அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேச்சு..!

தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் தமிழகத்தில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. அனைத்து கட்சி தலைவரையும் சந்திக்கும் ஒரே தலைவர் கலைஞர் தான். கலைஞருக்கு நிகரான தலைவர் இந்தியாவில் யாரும் இல்லை. அதே போன்று கரைபடாத கைக்கு சொந்தக்காரராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து துரோகம் செய்து வருகின்றன. அவர்களுக்கு பாடம் புகட்டும் காலம் கனிந்து விட்டது. இதனால் அனைவரும் விருப்பு, வெறுப்பு இன்றி ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தி.மு.க … Read more

தூத்துக்குடி சிவன் கோவில் நடைபெற்ற தீர்த்தவாரி ஊர்வலம் சிறப்பு படத்தொகுப்பு !!!

தூத்துக்குடி சிவன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை நடைபெற்ற தீர்த்தவாரி ஊர்வலம்.  சிறப்பு படத்தொகுப்பு:

குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

நெல்லை மாவட்டத்தில், தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டு தண்ணீர் கொட்டியது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது, அருவியில், நீர் வரத்து சீராக உள்ளதால், பயணிகள் குளிக்க காவல் துறையினர் அனுமதி அளித்தனர். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் பயணிகள் கூட்டம் … Read more

தூத்துக்குடியில் மாணவி அனிதாவிற்கு நீதி கேட்டு வஉசி கல்லூரி SFI மாணவர்கள் போராட்டம்…

தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் voc கல்லூரியில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இரா.அமர்நாத் தலைமை தாங்கினார்.மாவட்ட இணைச்செயலாளர் இ.சுரேஷ் முன்னிலை வகித்தார்.மேலும் மாநகர பொறுப்பாளர் ரத்னபிரவின்,மாநகர தலைவர் ஜாய்சன்,மாநகர துணைத்தலைவர் சுப்புலட்சுமி, இந்திய மாணவர் சங்கத்தின் voc கல்லூரி பொறுப்பாளர்கள் பிரபு,ரமேஷ்,கர்ணன்,கிருஷ்ணமுர்த்தி,பாலமுருகன்,மதன்,ஆனந்த் உட்பட சுமார் 2000 மாணவர்கள் மத்திய மோடி அரசையும்,மாநில பிஜேபி உதுகுழல் எடப்பாடி அரசாங்கத்தையும் கண்டித்து கோஷமிட்டனர்.