தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 2-ஆம் தேதி விடுமுறை

திருச்செந்தூரில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 2-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருசெந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வருகின்ற 28 -ஆம் தேதி கந்த சஷ்டி தொடங்குகிறது.இந்த கோயிலின் முக்கியமான திருவிழாவாக கந்த சஷ்டி கருதப்படுகிறது.இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி  தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 2-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதி- அமைச்சர் விஜயபாஸ்கர்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரில் 10% பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. தற்போது பெய்யத் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 144 தடை உத்தரவு- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் வருகின்ற 27-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட உத்தரவில்,வெங்கடேஷ் பண்ணையாரின் 16-வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.எனவே அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக நாளை காலை 6 மணி முதல் வருகின்ற 27-ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு ! வழக்கினை வாபஸ் பெற தமிழிசை முடிவு

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை தோல்வி அடைந்தார் .ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளர் கனிமொழி  வெற்றி பெற்றார். தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை   அவரை எதிர்த்துபோட்டியிட்ட முன்னாள்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது மனுவில் , தேர்தல் பிரசாரத்தின் போது. ஆரத்திக்கு பணப்பட்டுவாடா செய்த ஆதாரங்கள் இருக்கின்றது என்று … Read more

தூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை

தூத்துக்குடியில் 2 பேரை 7 பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்தாகுளம் சாலையில்  சென்று   கொண்டிருந்த   விவேக், முருகேஷ் ஆகியோரை  இன்று மாலை அடையாளம் தெரியாத 7 நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பிள்ளையை கொடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி!திடுக்கிடும் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பெண் மல்லிகா.இவர் அங்குள்ள அரசியல் பிரமுகர் ஒருவரிடம் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கி தரக்கோரி 40 ஆயிரம் ரொக்கமும் 8 பவுன் நகையும் கொடுத்துள்ளார். அப்போது வேலை தொடர்பாக அந்த பிரமுகரும் அந்த பெண்ணும் அடிக்கடி சந்தித்து பேசியதில் இருவரும் நெல்லை,தூத்துக்குடியில் உள்ள விடுதியில் நாள் கணக்காக தங்கும் அளவிற்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பிரமுகர் வேலை எதுவும் வாங்கித்தரவில்லை.கொடுத்த பணத்தையும் நகையையும் திருப்பி தரவில்லை.மல்லிகா … Read more

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை-கனிமொழி

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்பி கனிமொழி பேசினார்.அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு நீதி தேவை. பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை .வழக்கை சிபிஐக்கு மாற்றியும் ஒரு போலீசார் கூட எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை  திறக்க கோரிய வழக்கு : ஜூன் 27க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையை  திறக்க கோரிய வழக்கின் விசாரணை ஜூன் 27க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா … Read more

ஸ்டெர்லைட் வழக்கு :நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது தமிழக அரசு. உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்தது உச்சநீதிமன்றம்.அதில்  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இதனால் … Read more

ஸ்டெர்லைட் வழக்கு :ஜூன் 20ம் தேதி விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது தமிழக அரசு. உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்தது உச்சநீதிமன்றம்.அதில்  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இதனால் … Read more