யோவ் சும்மா இருயா…’வாரிசு’ நடன இயக்குனரால் கடிந்து கொண்ட தமன்.!

விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்றி வருகிறார். படத்திற்கான முதல் பாடல் ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று லைக்குகளை குவித்து வருகிறது. விரைவில் படத்தின் இரண்டாவது பாடலும் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் அந்த பாடலை கேட்க ஆவலுடன் காத்துள்ளனர். … Read more

சுறா 2.. யுவன் ஃப்ராடு… பரவும் பழைய பதிவுகள்.. லவ் டுடே இயக்குனரின் சேட்டைகளும் – வருத்தமும்.!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் தற்போது இருக்கும் இளம் நடிகர்களின் படங்கள் எந்த அளவிற்கு வசூலை குவித்து வருகிறதோ அதே அளவிற்கு வசூலை குவித்து வருகிறது. இவருடைய முதல் படம் கோமாளி ஆனால், அந்த படத்தை அவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கமட்டும் தான் செய்திருந்தார். ஆனால், லவ் டுடே படத்தை அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடித்துவிட்டார்.  படத்தில் அருமையாக நடித்து மக்கள் அனைவரையும் சிரிக்கவைத்து விட்டார் என்றே கூறலாம். இந்த … Read more

தளபதி 67 படத்தில் இருந்து விலகிய இயக்குனர்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நடித்துமுடித்த பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தான் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். அடுத்த மாதம் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கிடையில், தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவலும் கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் … Read more

தளபதியின் குட்டி கதை கேட்க தயாரா..? “வாரிசு” படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி இதோ.!

விஜய் படங்கள் வெளியானால் கண்டிப்பாக அதற்கு முன்பு அப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்துவிடும். அதில் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு குட்டி கதை ஒன்றையும் கூறுவார். கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர் ‘ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பிறகு இந்த ஆண்டு வெளியான ‘பீஸ்ட்’ படத்திற்கு சில காரணங்களால் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்தார்கள். பிறகு விஜய்யுடன் நேர்காணல் என்று நெல்சன் அவரை … Read more

விஜய் – ராஷ்மிகா செம குத்தாட்டம்…வெளியானது வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல்.!

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். நேற்று முன்தினம் படத்தின் முதல் பாடல் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என ப்ரோமோவுடன் அறிவிக்கப்பட்டிருந்தது. ப்ரோமோவில் பாடலை விஜய் பாடியதும், பாடலின் பெயர் ‘ரஞ்சிதமே’ … Read more

எனக்கு இன்று தான் தீபாவளி .. பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன்.!- தமன் ட்வீட்..

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய்க்கு இசையமைக்க வேண்டும் என இசையமைப்பாளர் தமன் நீண்ட ஆண்டுகளாக ஆவலுடன் காத்திருந்தார். இந்த ஆசை  “வாரிசு” படத்தின் மூலம் அவருக்கு நிறைவேறிவிட்டது என்றே கூறலாம். இப் படத்திற்காக தமன் ஒவ்வொரு பாடல்களையும் ரசித்து ரசித்து இசையமைத்துள்ளார். இதனை அவரே பல பேட்டிகளில் தெரிவித்தும் இருந்தார். இந்த நிலையில், வாரிசு படத்திற்கான ‘ரஞ்சிதமே ‘ எனும் முதல் பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார் … Read more

தளபதி என்ட்ரி செதறு செதறு… வெறித்தனமாக வெளியான ‘வாரிசு’ பாடல் வீடியோ.!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா,பிரகாஷ் ராஜ், சங்கீதா கிரிஷ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் மேகா, சம்யுக்தா கார்த்திக், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்திற்கான முதல் பாடலுக்கான ப்ரோமோ வீடியோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என … Read more

என்ன நண்பா ரெடியா..? ‘வாரிசு’ படத்தின் முதல் பாடல் ப்ரோமோ இன்று வெளியீடு.!

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதல் பாடல் தீபாவளி அன்று வெளியாகும் என விஜய் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், சில காரணங்களால் பாடல் வெளியாகவில்லை. இதனால் படத்தின் … Read more

வைரலாகும் கியூட் கிளிக்… தளபதி விஜய் கையில் இருக்கும் இந்த குழந்தை யாருனு தெரியுமா..?

நடிகர் விஜய் தற்போது  தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவ்வபோது படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருக்கும் புகைப்படங்கள் லீக் ஆகி … Read more

“வாரிசு” படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்.! எத்தனை கோடிகளுக்கு தெரியுமா..?

அடுத்ததாக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் என்றால் “வாரிசு” திரைப்படம் என கூறலாம். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படம் விஜய் படம் என்பதாலும், படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருவதாலும் படத்தின் பாடல்கள் … Read more