இன்ஜினீயரிங்கில் அசத்தும் ஜி.வி.யின் அடித்து நொறுக்கும் ஐங்கரன்…டீசர் இதோ….!!!

ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் மஹிமா நம்பியார் நடித்திருக்கும் படம் ஐங்கரன் இந்த படத்தை ஈட்டி பட இயக்குநர் ரவிஅரசுவின் இயக்கத்தில் உருவாகியுள்ளார். ‘ஐங்கரன்’ படத்தின் டீசர் இன்று வெளியாகிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் இந்தப் படத்தில் சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவும் ராஜா முகமது படத்தொகுப்பும் செய்திருக்கிறார்கள்.’ஈட்டி’ படத்தில் ஸ்போர்ட்ஸோடு ஆக்‌ஷனையும் கலந்துகட்டிய இயக்குநர், இந்தப் படத்தில் இன்ஜினீயரிங்கில் ஆக்‌ஷனை சேர்த்திருக்கிறார் இயக்குநர். DINASUVADU

முதலமைச்சர் பழனிசாமி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து..!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் பழனிசாமி சுதந்திர தினத் திருநாள் வாழ்த்து கூறியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி தனது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் அனைவரும் சாதி, மத, பேதங்களை கடந்து இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன் அயராது உழைத்திட வேண்டும் இந்தியத் திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை வளம்மிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்க வேண்டும்  என்று கூறினார். DINASUVADU    

லாரி-வேன் மோதி பெருந்துறை அருகே விபத்து!! டிரைவர் பலி..!!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பனப்பாக்கத்தில் இருந்து 23 பேர் டிராவல்ஸ் வேனில் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா புறப்பட்டனர்.வேனை பனப்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் (வயது 35) என்பவர் ஓட்டினார். அந்த வேனும் அவருக்கு சொந்தமானதாகும். இன்று அதிகாலை வேன் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை நெருங்கியது. பெருந்துறை அருகே டீச்சர்ஸ் காலனியில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பினர். பின்னர் அங்கிருந்து வேன் கிளம்பியது. அருகில் உள்ள மேம்பாலத்தில் வேன் ஏறியது. அப்போது முன்னால் சென்று … Read more

கொடைக்கானலில் 57-வது மலர் கண்காட்சி தொடங்கி வைத்தார் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!!

மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 57-வது மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ.1485 லட்சம் மதிப்பில் கொடைக்கானல் ரோஜா தோட்டம், கொய்மலர்கள் செயல்விளக்க மாதிரி தோட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் … Read more