‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம்.. நாளை முதல் அமல் – முதல்வர் வேண்டுகோள்!

MK STALIN

அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையிலும், நிருவாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், முழு அர்ப்பணிப்பு உணர்வோடு … Read more

சட்ட விரோத குவாரிகள்.. தமிழக அரசுக்கு ஒரு வாரம் கெடு.! உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு.!

சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள நடடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.   சட்டவிரோதமாக குவாரிகள் அமைக்கப்பட்டோ, அல்லது அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிக அளவிலோ மண்வள கனிமங்கள் எடுக்கப்படுவது அவ்வப்போது நடைபெற்று தான் வருகிறது. இதுகுறித்து, உயர்நீதிமன்றம் இன்று தானாக முன்வந்து வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முக்கிய உத்தரவை தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவித்துள்ளது. அதாவது, சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளை … Read more

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் சென்னையில் பயிற்சி பெற அனுமதி-தமிழக அரசு..!

வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்த 80 மாணவர்களுக்கு சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பயிற்சி பெற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு படித்து முடித்த மாணவர்கள், மத்திய அரசு நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், அதன் பிறகு ஒரு ஆண்டு சொந்த மாநிலத்தின் மருத்துவமனைகளில் பயிற்சி பெற வேண்டும். அதன் பின்னரே மருத்துவர்களாக பணியாற்ற முடியும். அந்த வகையில் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை பயின்ற 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களை பயிற்சி … Read more

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டு,ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதில் முக்கியமான ஒன்றான ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப் படுகிறது என்றும்,இத்திட்டம் வருகின்ற மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது.அதன்படி,பசும்பாலின் தற்போதைய கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.28 இல் … Read more

#Breaking:தமிழகத்தில் இன்றும்,நாளையும் சலூன்கள் இயங்க அனுமதி- தமிழகஅரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும்,நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சலூன்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக  வருகின்ற மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கின் போது அனைத்து தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள்,ஐ.டி.நிறுவனங்கள்,பூங்காங்கள்,அருங்காட்சியகங்கள்,சலூன்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும்,பேருந்து,கார்கள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்றும்,டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும்,முழு … Read more

#Breaking: ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 51 அதிகாரிகள் திடீர் மாற்றம்.. தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பணிபுரிந்து வரும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 51 காவல்துறை அதிகாரிகளை பதவிஉயர்வு அளித்து, பணியிடை மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டது. அதில், சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காளிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், கரூர் மாவட்ட காவல் கண்காளிப்பாளராக பகலவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்பியாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக … Read more

பள்ளித்தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக வரும் 23ஆம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.!

பள்ளித்தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக வரும் 23ஆம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமடைந்து வரும் நிலையில், மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மால்கள், திரையரங்குகள் போன்றவற்றை மூடவும் உத்தரவிட்டனர் இந்நிலையில், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி கூடுதல் விலையில் விற்கக்கூடாது என உயர்நீதிமன்றதில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை தாக்க செய்யவேண்டும் என நீதிபதி அறிவித்தார். … Read more

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணணுக்கு அடித்த ஜாக்பாட்!

நடிகர் சரவணன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். இவர் தமிழில் வைதேகி வந்தாச்சு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் கலந்து கொண்டார். இவர் சேரனை மரியாதை குறைவாக பேசியதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், தமிழக அரசு குறைந்த செலவில் வெளியிடப்படும் தரமான திரைப்படங்களுக்கு தலா ரூ.7 லட்சம் வழங்கவுள்ளது. இதனையடுத்து, 2015-2017 வரை வெளியான சிறந்த படங்களை … Read more

நீட் 2019 – அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவருக்கு கூட, அரசு கல்லூரியில் இடமில்லை – அதிர்ச்சி தகவல் !

தமிழக அரசு நடத்திய நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்த ஒரு மாணவருக்கு கூட அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு இடம் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 12 ம் வகுப்பு முடிந்ததும் மருத்துவம் படிப்பதற்கு நீட் என்னும் நுழைவுத்தேர்வு உள்ளது.  வெளியில், பல தனியார் கல்வி நிறுவனங்கள் நீட் தேர்வுக்கு என்று பயிற்சி அளித்து வருகிறது. அது போல், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளிகளிலே சிறப்பு பயிற்சி … Read more

மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

நாளை மறுநாள் பள்ளிகள் துவங்கவுள்ள நிலையில், பள்ளிக்கல்வி துறை, மாணவர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, மாணவிகள் இறுக்கமான மேல்சட்டை, லேக்கின்ஸ் அணிந்து வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தலையில் சாயம் பூசக்கூடாது  என்றும்,போலீஸ் கட் முறையில், முடியை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும், பிறந்தநாள் அன்றும் சீருடை அணியாமல் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.