RoyalEnfield Thunderbird மாடலுக்கு மாற்றாக களமிறங்க இருக்கும் Meteor 350.!

ராயல் என்பீல்டு ரசிகர்களின் விருப்ப மாடலாக விற்பனையில் இருக்கும் தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 ஃபயர்பால் மாடல் களமிறங்க உள்ளது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350யின் விலை ரூ.1,68,550 என ஆன்லைன் கான்ஃபிகுரேட்டர் மூலமாக தெரியவந்துள்ளது. இது தண்டர்பேர்டு எக்ஸ் மாடலை விட 5,000 ரூபாய் கூடுதலாகும். பெட்ரோல் டேங்க் அமைப்பில் எந்தவித மாற்றமும் புகுத்தப்படவில்லை. புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் சிறிய அளவிலான டிஜிட்டல் கிளஸ்ட்டரும் இதில் உள்ளது. அதே நேரத்தில், யூஎஸ்பி … Read more

ரசிகர்களின் பேராதரவு பெற்ற பஜாஜ் டிஸ்கவரின் விற்பனை நிறுத்தப்படுகிறதா?!

வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பஜாஜ் டிஸ்கவர் பைக் மாடலானது விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் பிஎஸ்-6 அப்டேட் பெற்று விற்பனைக்கு வருமா என்பதுதான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறைவான பட்ஜெட், எரிபொருள் சிக்கனம், குறைவான பராமரிப்பு போன்ற சிறப்பம்சங்கள் இந்த பைக்குகளுக்கு நல்ல வர்த்தக சந்தையை பெற்றுதந்தன. பஜாஜ் நிறுவனதின் விற்பனையில் டிஸ்கவர் மாடல்களின் வர்த்தகம் இன்றியமையாதது. டிஸ்கவர் மாடல்கள் கடந்த 16 ஆண்டுகளாக வர்த்தகத்தில் நல்ல நிலைமையில் இருந்து வருகின்றன. … Read more

விரைவில் இந்திய சந்தையில் களமிறங்கும் யமஹா WR-155R.! அசத்தல் அம்சங்கள் இதோ…

யமஹா தற்போது தனது புதிய தயாரிப்பு மாடலான ட்யூல்-ஸ்போர்ட் WR 155R மாடலை சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானில் அறிமுகப்படுயுள்ளது.  அதன் சிறப்பமசங்கள் மற்றும் அதன் இந்திய வருகையை பற்றியும் கீழே பார்க்கலாம்… இந்த புதிய யமஹா WR 155R மாடலானது ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோடு என இரு பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மடலின் திறனை அறியும் டைனோ சோதனையானது விடியோவாக பதியப்பட்டது. அதில் WR 155R  மாடலானது எந்தவொரு மாற்றமும் இல்லாமல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. … Read more

ரூ.4.57 லட்சம் முதல் தொடங்கும் ஹோண்டா சான்ட்ரோ காரின் சிறப்பம்சங்கள்.!

பி.எஸ்-6 ரக புதிய ஹோண்டா சான்ட்ரோ காரின் சிறப்பம்சங்கள் இதோ… பிஎஸ்6 மாசு கட்டுப்பாடு மேம்பாட்டை தவிர்த்து வேறு எந்த மாற்றங்களையும் ஹோண்டா நிறுவனம் சான்ட்ரோ மாடல் காருக்கு புகுத்தவில்லை. ஆனால், இந்த சான்ட்ரோ காரின் விலை 22,000 ரூபாய் முதல் 27,000 ருபாய் வரையில் விலை உயர்த்தியுது. இதுபோக, ஆஸ்டா வேரியண்டினை பின்பற்றி ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் முக்கிய டாப் வேரியண்டாக களமிறங்கியுள்ளது. பிஎஸ் 6 தரம் பெற்ற 1.1 லி பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக … Read more

200 சிசி மாடல்களுக்கு சரியான போட்டியாக விரைவில் களம் காணும் ஹோண்டா சி.பி.எஃப்190 ஆர்.!

ஹோண்டா CBF190R மற்றும் ஹோண்டா CBF190 X மாடல்களின் அசத்தல் சிறப்பம்சங்கள் இதோ… இந்தியாவில் தற்போது களத்தில் உள்ள 200சிசி மாடல் பைக்குகளுக்கு போட்டியாக ஹோண்டா CBF190R ஸ்டீரிட் ஃபைட்டர் மாடலை இந்தியாவில் களமிறக்க ஹோண்டா முயன்று வருகிறது. சீனாவில் களமிறங்கிய சி.பி.எஃப் 190 எக்ஸ் அட்வென்ச்சர் மாடலை அடிப்படையாக கொண்டு சிபிஎஃப் 190 ஆர் பைக் இந்தியாவில் களமிறங்க, காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த மாடலில் 184cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக … Read more

சபாஷ் சரியான போட்டி.! பல்சர் 125 VS ஹோண்டா எஸ்பி 125.!

ஹோண்டா எஸ்பி 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 மாடல்களின் அசரடிக்கும் சிறப்பம்சங்கள். ஒப்பிட்டு பார்த்து ஊரடங்கு முடிந்ததும் ஊரை சுற்ற வாங்கிக்கொள்ளுங்கள். டிஸைன் : பல்சர் 125ஆனது பல்சர் 150 மாடலின் வடிவத்தை ஒற்றி அதே ஸ்டைலில் மிக நேர்த்தியாக இளைய தலைமுறையினரை கவரும் வகையில் அமைந்துள்ளது. எஸ்பி 125 மாடலானது அசத்தலான டேங்க், அருமையான முன்புறம் போன்ற அம்சங்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. என்ஜின் இரண்டு மாடல்களும் 125சிசி என்ஜினை பெற்றுள்ளது. மேலும் … Read more

ராசயனம் ஏதுமின்றி காருக்குள் இருக்கும் கிருமிகளை அழிக்கும் புதிய தொழில்நுட்பம்.!

காரின் உட்பக்கம் உள்ள கிருமிகளை அளிக்க ரசாயனம் கலந்த ஸ்ப்ரே போன்ற எதோ ஒன்றை தெளித்து துடைத்து சுத்தப்படுத்துவோம். அதனை தவிர்த்து தற்போது காரினுள் இருக்கும் கிருமி, பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை அளிக்க புதிய தொழில்நுட்பத்தை மலேசியாவைச் சேர்ந்த மெட்கின் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் கண்டுபிடித்த தொழில்நுட்பம் செராஃபியூஷன் எனப்படுகிறது. பாக்டீரியா, வைரஸ், போன்றவை காற்றில் இருக்கும் நேர்மறையான அயன் மூலமாக சுவாசிக்கிறது. செராஃபியூஷன் தொழில்நுட்பமானது காற்றில் எதிர்மறை ஆக்ஸிஜன் அணுக்களை வெளியிட்டு விடும்.அது காற்றை … Read more

ஹைட்ரஜன் காருக்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் ஹுண்டாய் நிறுவனம்..!

பெட்ரோல், டீசல் போன்றவற்றால் ஏற்படும் மாசினை குறைக்க, ஹுண்டாய் நிறுவனம், மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் காரை இந்நிறுவனம் தயாரித்க ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகம் செய்துள்ளது. அந்த கார், மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, ஹைட்ரஜனால் இயங்கும் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய, இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த காருக்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் முதற்கட்ட ஆய்வுப் பணிகளை தொடங்கியது. இதற்கான முடிவுகள் சாதகமான வந்தால், … Read more

அசத்தலான புதிய வசதிகளுடன் விற்பனையில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

இளைஞர்களின் தற்போதைய கனவு வாகனம் என்றால் அதில் ராயல் என்பீல்டிற்கு தனி இடம் உண்டு. ராயல் என்பீல்டு நிறுவனம் பல மாடல்களில் தங்கள் பைக்குகளை விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. அதில் ஹிமாலயன் மிக முக்கியமானது. இமையமலை பயணத்திற்கென முக்கியமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஹிமாலயன் வாகனம் தற்போது புதிய அம்சங்களை கொண்டு விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. இந்த வாகனத்தில் 411 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் ஆனது 24.5 பி.எச்.பி திறன் கொண்டதாகும். இதில், … Read more

க்ராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் பெற்று அசத்திய டாடா நெக்ஸான்!!!

குளோபல் என்சிஏபி ஆனது, டாடா நெக்ஸான் எஸ்யுவியை ஆகஸ்ட் மாதம் க்ராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியது. இதில் 4 ஸ்டார்கள் பெற்று இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பான காராக பெயர் பெற்றது. இதனை தொடர்ந்து, தற்போது அந்த மாடலில் சீட்பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. பிறகு பக்கவாட்டு க்ராஷ் சோதனை நடத்தப்பட்டது. இதில் 5 ஸ்டார்களை பெற்று அசத்தியுள்ளது.  ஆகஸ்டில் நடைபெற்ற க்னாஸ் டெஸ்டில் பெரியவர்களுக்கான பாதுகாப்புக்கு வழங்கப்படும் அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 13.56 புள்ளிகளை … Read more