ஸ்டெர்லைட் எங்களுக்கு தேவையில்லை.! தமிழக அரசு திட்டவட்டம் .!

Sterlite Case in Supreme court of India

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுசூழல் மாசுபடுகிறது, அங்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என கூறி எதிர்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்த வேளையில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மீண்டும் தூத்துக்குடியில் … Read more

#BREAKING :வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல்..!

ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வேண்டும் என வேதாந்தா நிறுவனம் மனுத் தாக்கல் செய்த நிலையில் தற்போது அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு தள்ளுபடி செய்ய தமிழக … Read more

#BreakingNews : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் மேல்முறையீடு

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. பின்னர்  ஆலையை திறக்க  பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் வேதாந்தா … Read more

மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! – கே.பாலகிருஷ்ணன்

மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. கடந்த 2018-ம் ஆண்டு நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த போராட்டத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்நிலையில், வேதாந்த நிறுவனம்  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை என்று  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் … Read more

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு : துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! – வைகோ

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால், தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வேதாந்த நிறுவனம்  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. … Read more

ஸ்டெர்லைட் வழக்கு…எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது தமிழகஅரசு…!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் ஸ்டெர்லைட் ஆலையை விரைவில் திறக்க வேண்டுமே என்ற மனு விசாரணையும் , ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ சார்பில் இந்த ஆலையை திறக்க கூடாது என்ற மனுவும் சேர்த்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இந்த நிறுவனம் … Read more

ஸ்டெர்லைட் வழக்கு விசரனை நிறைவு…தீர்ப்பு ஒத்திவைப்பு….!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் ஸ்டெர்லைட் ஆலையை விரைவில் திறக்க வேண்டுமே என்ற மனு விசாரணையும் , ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ சார்பில் இந்த ஆலையை திறக்க கூடாது என்ற மனுவும் சேர்த்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இந்த நிறுவனம் … Read more