சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக விஷ்ணுவிஷால் அறிவிப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!

நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் இவர் வழக்கமாக பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சிறிது காலம் சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வெடுக்க விரும்புவதாக விஷ்ணு விஷால் தற்போது அறிவித்துள்ள்ளார். இது தொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாழ்க்கைக்கு ஓய்வு அவசியம். எனவே, சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புகிறேன். விரைவில் … Read more

கிராமத்தில் பிரமாண்ட செட்.! விறு விறுப்பாக தயாராகும் விடுதலை.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் முதல் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துள்ளது. விஜய் சேதுபதி சில படங்களில் நடித்து வருவதால், அவருக்காக விடுதலை இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக காத்துள்ளனர். இதற்கிடையில், வெற்றிமாறனும் விஜய் சேதுபதி வரும் வரை … Read more

தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது – நடிகர் சூரி பேட்டி.!

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது நடிகர் சூரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண மோசடி புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை தன்னிடம் 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் தன்னிடம் நிலம் வாங்கி தருவதாக அந்த பணத்தை அவர் வாங்கி வைத்திருந்தார் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அந்த வழக்கிற்காக நேற்று நடிகர் சூரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய … Read more

வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன் – சூரி.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த படம் படம் ஜல்லிக்கட்டு கதையை வைத்து எடுக்கப்படவுள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது என்று கூறலாம். சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் படத்திற்காக காத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டிங்நடந்துள்ளது. அதில், ஜல்லிக்கட்டு செட் அமைத்து ஷூட்டிங் நடந்துள்ளது. அப்போது அங்கு நடிகர் சூரி சென்றுள்ளார். அப்போது சூர்யா, வெற்றிமாறனுடன் எடுத்த புகைப்படத்தை … Read more

சூரியின் 1 லட்சத்தை காலி செய்த புகழ்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் 11 -ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் ப்ரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, விஜய் டிவி புகழ், வினய் என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதனை சூரி, புகழ் அண்மையில் எதற்கும் … Read more

சூர்யா அண்ணா ரசிகர்களுக்கு செம்ம விருந்து இருக்கு!- சூரி கலகல பேச்சு

சூர்யா அண்ணா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து இருக்கிறது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். சூர்யா நடிப்பில் வரும் 10-ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கான டிரைலர் இன்று காலை வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னையில், நடைபெற்றது. … Read more

வெற்றிமாறன் – சூரியின் “விடுதலை” எப்போது ரிலீஸ் ..? வைரலாகும் புதிய தகவல்.!

விடுதலை திரைப்படம் ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் அடுத்ததாக நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் நடிகர் சூரி … Read more

மறக்கமுடியுமா.? வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி 8 ஆண்டுகள்.!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். படத்தின் இசை, காமெடி என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காமெடி கலந்த காதல் படமாக உருவான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல … Read more

உலக சினிமாவை தமிழ் மொழியில் தரும் வெற்றிமாறன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து -சூரி.!

இயக்குனர் வெற்றிமாறனுக்கு நடிகர் சூரி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் வெற்றிமாறன். இந்த படத்தை தொடர்ந்து ஆடுகளம் என்ற படத்தை இயக்கியனார். இந்த திரைப்படம் தேசிய விருதை வென்றது. அடுத்ததாக விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய அற்புதமான படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். இதில், அசுரன் திரைப்படமும் தேசிய விருதை வென்றுள்ளது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “விடுதலை” என்ற படத்தை … Read more

வேலன் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து வெளியான அறிவிப்பு.!

வேலன் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் கலைமகன் அறிவித்துள்ளார்.  பிக்பாஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்த முகின் ராவ் அடுத்ததாக வெள்ளித்திரையில் “வேலன்” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கவின் என்பவர் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு வெளியான நிலையில், அடுத்த அப்டேட்டாக படத்திற்கான மோஷன் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. … Read more