காமெடிக்கு பஞ்சமே இருக்காது போலயே.! சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இணைந்த 3 காமெடி நடிகர்கள்.!

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் டான் படத்தில் காமெடி நடிகர்களான முனீஷ்காந்த் ,பாலா மற்றும் காளி வெங்கட் ஆகியோர் இணைந்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் . இதில் டாக்டர் திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். அயலான் திரைப்படம் வருகின்ற கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் … Read more

டாக்டர் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளியாகிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் வருகிற 26-ஆம் தேதி மார்ச் மாதம் வெளியாகும் என சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அயலான் மற்றும் டாக்டர் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் படப்பிடிப்புகள் அனைத்தும் முழுவதுமாக முடிவடைந்து விட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியது. அயலான் படத்திற்கு மட்டும் சில கிராபிக்ஸ் பணிகள் இருக்கிறது என்று கூறப்பட்டது. … Read more

அடேய்… வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா..? பிரபல இயக்குனரிடம் அப்டேட் கேட்ட சிவகார்த்திகேயன்..!

இயக்குனர் நெல்சனிடம் சிவகார்த்திகேயன் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த நிலையில், டாக்டர் மற்றும் தளபதி 65 படம் அப்டேட் எதுவும் இல்லையா என கேள்வி கேட்டிருந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், டாக்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘டான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். … Read more

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

டான் படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிப்புகள் வெளியாக இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி உள்ளது. இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் ‘டான்’. இப்படத்தை  சுபாஷ்கரனும், சிவகார்த்திகேயனும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிப்புகள் வெளியாக இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ … Read more

நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் முக்கிய அப்டேட்!

நவம்பர் மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி, 2 மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படமானது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளது.  இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இப்படத்தின் ஹீரோவாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.  இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.  கொரோனா காரணமாக  இரண்டு … Read more

சிவகார்த்திகேயனின் அயலான் படம் குறித்த புதிய அப்டேட் – கொண்டாடும் ரசிகர்கள்!

இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் புதிய படம் ஆகிய அயலான் படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என புதிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்க கூடிய நடிகர் தான் சிவகார்த்திகேயன். தொடர்ச்சியாக பல படங்களில் ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தற்பொழுது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே டாக்டர் படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்பொழுது அயலான் … Read more

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இந்த படம் தமிழ் புத்தாண்டில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் டாக்டர் இந்த படத்தில் கதா நாயகியாக பிரியங்கா அருள்மோகன் அவர்கள் நடித்துள்ளார். மேலும் பல விஜய் டிவி பிரபலங்களும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், அடுத்ததாக இயக்குனர் நெல்சன் விஜய்யின் படத்தை இயக்க இருப்பதால் … Read more

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்..?

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு ஆக்ஷன் திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வளைத்தளத்தில் செய்திகள் வைரலானது. ஆனால் இயக்குனர் பொன்ராம் சூர்யாவின் படத்தை இயக்குவதால் சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு . இந்த நிலையில் தற்போது இயக்குனர் … Read more

இன்று வெளியாகிறது அதர்வாவின் “குருதி ஆட்டம்” டீசர்.!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் டீசர் இன்று 6 மணிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் குருதி ஆட்டம் . 8 தோட்டாக்கள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீ … Read more

சிவகார்த்திகேயனின் “அயலான்” படத்திலிருந்து வெளியான முக்கிய அப்டேட்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் .இதில் டாக்டர் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை சிவகார்த்திகேயன் முடித்துள்ளதாகவும் ,கோடை … Read more