மாணவர்களின் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் எண்ணிக்கையை பொய்யாக காட்டி மாணவர்களின் நலத்திட்டங்களில் முறைகேடு நடப்பதை தடுக்க ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை தகவலை அரசு உருவாக்கி உள்ளது. ஆதலால் கல்வித்துறை கொடுத்துள்ள எமிஸ் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை இந்த மாதம் 31ஆம் தேதிக்கு முன்னர் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

8 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவிகளின் கல்வி உதவித்தொகை என்னாச்சு…கனிமொழி எம்.பி

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் 8ஆம் வகுப்புக்கு மேல் படிக்க மத்திய அரசாங்கம் உதவித் தொகை அளிக்கிறது. தமிழக அரசால் பயனாளிகள் பட்டியல் தரப்படாததால் 2011 முதல் தமிழகத்தில் யாருக்கும் இது கிடைக்கவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாநில அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.