எதிர்க்குரல் போராட்டம் இல்லாமல் எதுவுமே கிடையாது!

இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில், நடிகர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத்தலைவன். இந்த படத்தில் கருணாஸ்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து இப்படத்தின் இயக்குனரான மணிமாறன் கூறுகையில், இப்படம், எதிர்குரலின் அவசியத்தை பற்றி பேசியிருப்பதாகவும், ‘எதிர்க்குரல் போராட்டம் இல்லாமல் எதுவும் கிடைக்காது. ஜல்லிக்கட்டு, 8 வழிச்சாலை, 5-ம் வகுப்பு பொதுத்தேர்வு போன்ற சமூக பிரச்சனைகளுக்கு போராட்டத்தால் தான் தீர்வு கிடைத்தது. இதை உணர்த்தவே எதிர்குரலை பதிவு செய்யும் கம்யூனிஸ்ட் படங்களுக்கு எப்போதுமே தேவை இருக்கும்’ … Read more

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் சங்கத்தலைவனாக மாறிய சமுத்திரக்கனி!

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இப்படத்தை மணிமாறன் இயக்க உள்ளார். இவர் இதற்க்கு முன்னர் சித்தார்த் நடித்த உதயம் படத்தையும், ஜெய் நடித்த புகழ் படத்தையும் இயக்கியவர் ஆவார். இந்த படத்தில் நடிகர் இயக்குனர் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க உள்ளார். தொகுப்பாளினி ரம்யா நாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில்படம் பற்றிய அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.