சல்மான் குர்ஷித் புத்தகத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி..!

சல்மான் குர்ஷித் புத்தகத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித்தின் புதிய புத்தகமான “சன்ரைஸ் ஓவர் அயோத்யா” தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த புத்தகத்திற்கு தடை கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. “மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டால், நாங்கள் என்ன செய்ய முடியும். இந்த புத்தகத்தில், சல்மான் குர்ஷித் இந்துத்துவாவை பயங்கரவாத அமைப்புகளான ஐஎஸ்ஐஎஸ் மற்றும் போகோ ஹராம் போன்ற … Read more

மோசடி புகார் – முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு பிடிவாரண்ட்…!

முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மனைவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசால் சேவைப்பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித்க்கு பிணையில் வெளிவர இயலாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை – ரூ .71.50 லட்சம் மானியம்: உத்திரபிரதேசத்தின் 17 மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு  சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் செவிப்புலன் கருவிகளை வழங்குவதற்காக 2010 … Read more

டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!

டெல்லி கலவர வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவர் குர்ஷித் பெயர் இடம்பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்பாளர்களுக்கும் இடையிலான வன்முறை மோதல்களில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள், கலவரத்தை தூண்டியவர்கள், ஆத்திரமூட்டும் வகையில் பேசியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில், காங்கிரஸ் … Read more

சிதம்பரம் மேல்முறையீட்டு மனு ! மூத்த வழக்கறிஞர்கள் 3 பேர் வாதம்

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் .இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க  மறுப்பு தெரிவித்துவிட்டது. பின்  டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க  மறுப்பு  தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில்  ப.சிதம்பரம் தரப்பில்  மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.இந்த மேல்முறையீட்டு வழக்கில்,மூத்த வழக்கறிஞர்களான  கபில் சிபில்,சல்மான் குர்ஷித் விவேக் தங்கா ஆகியோர் வாதிட உள்ளனர்.