மக்களே ரெடியா…இன்று காலை 10 மணி முதல் – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

இன்று முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்று சென்னைவாசி மக்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலங்களில் இன்று (ஜூன் 11-ஆம் தேதி) முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் புதிய … Read more

அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை.. 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்!

குடும்ப அட்டைகளில் இருந்த 12 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என அமைச்சர் சக்கரபாணி தகவல். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளது. இதுபோன்று உயிரிழந்த பிறகும் குடும்ப அட்டைகளில் இருந்த 12 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் புதிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகைக் கட்டிடத்தில் … Read more

#Breaking:ரேசன் கடைகளில் தரமான பொருட்கள் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில்,நல்ல தரமான ரேசன் பொருட்கள் மட்டுமே நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகின்றனவா? என்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு குழுக்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவில் மாவட்ட வழங்கல் அலுவலர்(கன்வீனர்), முதுநிலை மண்டல மேலாளர் (தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்),கூட்டுறவு இணைப் பதிவாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (சிவில் சப்ளைஸ் சிஐடி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். … Read more

குடும்ப அட்டைகளில் இவர்களின் பெயரை நீக்கவில்லை என்றால் ரத்து – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

போலி குடும்ப அட்டைகளை கண்டறிய 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைகளின் விவரங்களை சேகரிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள போலி குடும்ப அட்டைகளை கண்டறிய 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைகளின் விவரங்களை பொது விநியோக தரவு தளத்தில் இருந்து பெற்று அவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிப்பதை உறுதி செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,பிராக்சி முறை பரிவர்த்தனை … Read more

திமுக ஆட்சியில் 7 லட்சம் பேர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம்…!

திமுக ஆட்சியில் 7 லட்சம் பேர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம். கடந்த சட்டமன்ற  தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றது முதல், தமிழக மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த மே மதம் முதல் ஜூலை வரை புதிதாக, ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு 7.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மே மாதத்தில் 1.26 லட்சம், ஜூனில் 1.57 லட்சம், ஜூலை … Read more

15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை – அமைச்சர் சக்கரபாணி

குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக புகார் புத்தகம் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்களை வழங்கினால், பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரேசனில் தரமான பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

அரிசிக்கு பதில் பணம் : ஆளுநர் உத்தரவு செல்லும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க  துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பணத்துக்கு பதில் இலவச அரிசு வழங்குவது என்று  பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் இந்த தீர்மான அறிக்கையுடன் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை  சந்தித்தபோது, இதற்கு கிரண்பேடி  மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. பின் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் … Read more

அரிசி அட்டை பெற விரும்பினால் குடும்பஅட்டை நகலை இணைக்க வேண்டும் – அமைச்சர் காமராஜ்

அரிசி அட்டை பெற விரும்பினால் குடும்பஅட்டை நகலை இணைக்க வேண்டும் என்று  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இது குறித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறுகையில்,ச   ர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ள முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரிசி அட்டை பெற விரும்பினால் விண்ணப்பங்களுடன் குடும்பஅட்டை நகலை இணைக்க வேண்டும் .விண்ணப்பங்கள் உடனே பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைகளாக … Read more

சர்க்கரை ரேஷன் அட்டைகளைஅரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றலாம்- தமிழக அரசு

ரேஷன் கடைகளில் சர்க்கரை வாங்கும் கார்டுகளை, அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,10 ,19, 491 சர்க்கரை அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் சர்க்கரை வாங்கும் கார்டுகளை, அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் . அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ள இன்று முதல் நவம்பர் 26-ஆம் தேதி வரை http://tnpds.gov.in என்ற இணையதளத்திலும், வட்டவழங்கல் அதிகாரியிடமும் … Read more