மக்களவையில் நிறைவேறிய முக்கிய ‘தேர்தல்’ சட்ட மசோதா.! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.! 

Election Commission of India - Winter session of Parliament

தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மற்ற உயர் தேர்தல் அதிகாரிகளை நியமிக்கும் குழுவில்  பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் இருக்க வேண்டும் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. ஆனால் அதனை மறுத்து, மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றி உள்ளது. புதிய சட்டதிருத்தத்தின் படி, தேர்தல் உயர் அதிகாரிகளை நியமிக்கும் குழுவில், பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் உடன் இந்திய தலைமை நீதிபதிக்கு பதில் மத்திய அமைச்சர் … Read more

தமிழக எம்.பி.க்கள் 6 பேர் உட்பட 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..!

Lok saba

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி வரும் 22–ம் தேதிவரை நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் மக்களவையில் 2 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்தனர். அதேபோல நாடாளுமன்ற வெளியே ஒரு பெண் உட்பட  இருவர் வண்ண புகை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 4 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் காங்கிரஸ், திமுக … Read more

34 நாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.! மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்.!   

Union Minister V Muralidharan

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி இன்று 5வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். மேலும் தங்கள் துறை சார்ந்த தரவுகளையும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். அதில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் முக்கிய தரவு விவரங்களை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அதில், இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு படிப்பிற்காக சென்ற மாணவர்களில் கடந்த … Read more

காங்கிரஸ் தலைவர் கார்கே கூறிய ‘நாய்’ கருத்து.! பாஜக எம்எல்ஏ கடும் விமர்சனம்.!

காங்கிரஸ் பல தியாகங்களை செய்துள்ளது. உங்கள் தரப்பில் (பாஜக) இருந்து ஒரு நாய் கூட இறந்ததில்லை. என என காங். தலைவர் கார்கே கூறியதற்கு பாஜக எம்.எல்.ஏ தனது எதிர்கருத்தை தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸார் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது. அண்மையில் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசுகையில், சுதந்திரத்திற்காக காங்கிரஸ் பல தியாகங்களை செய்துள்ளது. உங்கள் தரப்பில் இருந்து ஒரு நாய் கூட இறந்ததில்லை என கட்டமாக தனது … Read more

குளிர்கால கூட்டத்தொடர் முதல் நாள்.! மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை.!

மக்களவை கூட்டதொடர் 12 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  இன்று (டிசம்பர் 7) முதல் இம்மாதம் (டிசம்பர்) 29ஆம் தேதி வரையில் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 20கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்றப்பட உள்ளன. அதே போல , விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், விவாதங்களை முன்னெடுக்கவும் தயாராக உள்ளன. இதனால், இந்த கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் … Read more

#Breaking:இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி டி உஷா உள்ளிட்ட நால்வர் ராஜ்யசபாவுக்கு பரிந்துரை

இசைஞானி இளையராஜா,தடகள வீராங்கனை பி டி உஷா ஆகியோர்  மாநிலங்களவை நியமன எம்.பி.க்கள் ஆகின்றனர். பழம்பெரும் தடகள வீராங்கனை பி டி உஷா மற்றும் இசைஞானி இளையராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் புதன்கிழமை மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். தர்மஸ்தலா கோவிலின் பரோபகாரரும், நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்கடே மற்றும் பிரபல திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் பாராளுமன்ற மேல்சபைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது பி.டி. உஷா … Read more

நாட்டில் 7% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர் – ஒன்றிய அமைச்சர் ராணி!

நாட்டில் 7% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுமார் 7 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் நேற்று ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார். மேலும், இதில் 2% குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரு கோடி குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓர் அலசல்! மக்களவை – மாநிலங்களவை வித்தியாசம் என்ன? இதோ!

டெல்லி நாடாளுமன்றம் மக்களவை – மாநிலங்களவை வித்தியாசம் என்ன? என்பது குறித்த ஓர் அலசல். மாநிலங்களவை தேர்தல்: நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா உள்பட 13 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அந்த காலியிடங்களை நிரப்ப இம்மாதம் 31-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, பஞ்சாப்பில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, இமாசல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்தில் தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடக்கிறது. … Read more

Rajya Sabha: மாநிலங்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் முறை..!

1954 ம் ஆண்டு மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும் இந்தியில் பெயரிடப்பட்டன. மாநிலங்கள் அவையின் முதல் கூட்டம் 1952ம் ஆண்டு நடைபெற்றது. மொத்தம் 250 உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவார்கள். 238 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலமும், மீதமுள்ள 12 என மொத்தம் 250 உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவார்கள். 30 வயது முடிந்திருக்கவும் வேண்டும். மத்திய மாநில அரசாங்கத்தின் ஊதியம் பெரும் பதவியில் இருக்கக் கூடாது. குற்றவழக்கில் சிறைத்தண்டனை பெற்றவராக … Read more

ரூ.21,074.43 கோடி மதிப்பில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன- மத்திய அமைச்சர்..!

2019 முதல் 2022 பிப்ரவரி வரை  ரூ.21,074.43 கோடி மதிப்பிலான 128 வழக்கு நிலுவையில் உள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மாநிலங்களவையில் வங்கி மோசடிகள் தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மொத்தம்  ரூ.21,074.43 கோடி மதிப்பிலான 128 வங்கி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில், மேற்கு வங்கத்தில் ரூ.293.64 கோடி மதிப்பிலான 6 … Read more