4 மாநில வாக்கு எண்ணிக்கை.. 2 மாநிலங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக ..!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு மாநிலங்களில் இரண்டில் பாஜக முன்னிலையிலும், இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும் உள்ளது. அதன்படி 199 இடங்களைக் கொண்ட ராஜஸ்தானில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி பாரதிய ஜனதா 71 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் ஆளும் கட்சியான காங்கிரஸ் 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 230 இடங்களைக் கொண்ட மத்தியப்பிரதேசத்தில்  பாஜக – 57 இடங்களில் முன்னிலையிலும் … Read more

கருத்துக்கணிப்பு எப்படி இருந்தாலும் மீண்டும் காங்கிரஸ் தான் ஆட்சிக்கு வரும்.. முதல்வர் அசோக் கெலாட் உறுதி!

Ashok Gehlot

நாட்டில் 5 மாநில சட்டப்பேரவையில் பாஜக எந்த மாநிலத்திலும் வெற்றி பெறாது என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்த நிலையில், தெலுங்கனாவில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த 5 மாநிலங்களிலும் பாஜக காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த 5 மாநில தேர்தலின் முடிவு … Read more

காங்கிரஸ் vs பாஜக : ராஜஸ்தானில் தொடங்கியது விறுவிறு வாக்குப்பதிவு.! 

Rajasthan Assembly election 2023

இந்திய தேர்தல் ஆணையம் இம்மாதம் நடைபெறும் என அறிவித்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், இன்று ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி இன்று மாலை 6 மணி வரை மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் 2018 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 73 தொகுதிகள் … Read more

காங்கிரஸ் அரசுக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்.! அமித்ஷா பேட்டி.!

Rajastan CM Ashok Gehlot - Union Minister Amit shah

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இம்மாதம் 5 மாநில தேர்தல் நடைபெபெற்று வருகிறது. ஏற்கனவே மிசோராம், சத்தீஸ்கர், மத்திய பிரதேச தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன. நாளை மறுநாள் (நவம்பர் 25)இல் ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் தேர்தல் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுற உள்ளது. அதனால் பிரதான கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சார வேலைகளை மேற்கொண்டு வருகிண்றனர். இந்த ‘பாரத மாதா’ யார்? நாட்டின் செல்வம் … Read more

பிரதமர் மோடியின் ‘சாலை பயணம்’ தோல்வி.! ராஜஸ்தான் முதல்வர் கடும் விமர்சனம்.!

PM Modi - Rajasthan CM Ashok Gehlot

வரும் நவம்பர் 25 (சனிக்கிழமை) அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இதோடு, சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், தெலுங்கானா (நவம்பர் 30) ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் பிரச்சாரங்கள் அனல் பறக்க ஆரம்பித்துள்ளன. அதுவும். ராஜஸ்தானில் ஆளும்கட்சி காங்கிரஸ். எதிர்க்கட்சி பாஜக என்பதால் முக்கிய தேசிய தலைவர்கள் … Read more

கட்டுப்பாட்டை இழந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த பேருந்து விபத்து! 4 பேர் உயிரிழப்பு, 34 பேர் காயம்…

Rajasthan

இராஜஸ்தான் மாநிலத்தின் தௌசா மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தவுசா ஆட்சியர் வட்டம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 34 பேர் காயமடைந்துள்ளனர். ஹரித்வாரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, தௌசா ஆட்சியர் அலுவலகம் அருகே அதிகாலை 2.15 மணியளவில் இந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் காரணமாக ரயில் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டதுடன். பின்னர், காயமடைந்த அனைவரையும் ஆம்புலன்ஸ்களில் … Read more

நெருங்கும் தேர்தல்..! சத்தீஸ்கர், ராஜஸ்தானில் அமலாக்கத்துறை சோதனை..!

Enforcement

இந்திய தேர்தல் ஆணையம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கானஅட்டவணை வெளியானதை அடுத்து பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதியும், சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ம் தேதியும் தேர்தல் … Read more

ரவுடிகளின் சமூக வலைதள ஈர்ப்பில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற ராஜஸ்தான் காவல்துறை புதிய முயற்சி.!

இணையத்தின் வாயிலாக இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இருக்க ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளனர்.  ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர்கள் சமூக வலைத்தளம் மூலம் கெட்டுவிடாமல் இருக்க, ரவுடிகளின் சமூக வலைதள பதிவால் ஈர்க்கப்படமால் இருக்க ராஜஸ்தான் காவல்துறையினர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதில், சைபர் கிரைம் மூலம் சமூக வலைதளங்களில் செயல்படும் குற்றவாளிகளுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இளைஞர்கள் ரவுடிகளின் சமூக வலைதள பதிவால்  ஈர்க்கப்படாமல் இருக்க மாவட்டந்தோறும் கவுன்சலிங் … Read more

முகேஷ் அம்பானியின் இளைய மகனுக்கு கோலாகல நிச்சயதார்த்தம்.! தொழிலதிபர் மகளை மணக்கிறார்.!

ரிலையன்ஸ்  நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி யின் இரணடைவது மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது நிச்சயதார்த்தம் ராஜஸ்தானின் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்றது. இவர்களது நிச்சயதார்த்தத்திற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் தூங்கி வழிந்த ராஜாஸ்தான் மாநில முதல்வரின் ஆலோசகர்.! வைரலாகும் வீடியோ…

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசகரும், சுயேச்சை எம்எல்ஏவுமான சன்யம் லோதா பத்திரிகையாளர் சந்திப்பின் போது தூங்கியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகாலம் நிறைவடைந்ததை முன்னிட்டு கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் போது செய்யப்பட்ட சாதனைகளை விளக்கும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசகரும், சுயேச்சை எம்எல்ஏவுமான சன்யம் லோதா, அந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது தூங்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி … Read more