பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி அளிப்பதாக அறிவித்த பஜ்ரங் புனியா..!

பல மல்யுத்த வீராங்கனைகள் மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறினர். இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக  மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, பிரிஜ் பூஷன் சிங்  மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் பிரிட்ஜ் பூஷன் சிங் நண்பருமான சஞ்சய் குமார் … Read more

நேபாளத்தின் புதிய பிரதமராக சிபிஎன் மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா பதவியேற்கிறார்

நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தஹால் “பிரசந்தா” வை நியமித்து ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா, இமாலய தேசத்தில் அரசியலில் பெரும் திருப்பமாக கடந்த மாதம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து பிரதமருக்கான உரிமை கோருவதற்காக ஜனாதிபதியை சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Rishi sunak : இங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்

பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக்கை எதிர்த்து போட்டியிட்ட போட்டியாளரான பென்னி மார்டண்ட் போட்டியிலிருந்து விலகியதை தொடர்ந்தும்  பெரும்பாலான எம்பிக்களின் ஆதரவுடன் பிரதமராகிறார் ரிஷி சுனக். 42 வயதான அவர் இரண்டு மாதங்களுக்குள் நாட்டின் மூன்றாவது பிரதம மந்திரியாக மாறுவார், அவருக்கு முன்னோடியாக இருந்த லிஸ் ட்ரஸ் ஆறு வாரங்களுக்குப் பிறகு பொருளாதார சந்தைகளை உலுக்கிய ஒரு பொருளாதாரத் திட்டத்தால் பதவியில் இருந்து விலகினார்.

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? வாக்குப்பதிவுகள் முடிந்தன!

சுனக் & டிரஸ் இடையேயான பிரிட்டன் பிரதமர் பந்தயத்தில் வாக்குப்பதிவுகள் முடிந்தது. செப் 5ல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளது. பிரிட்டனின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்குப் பதிலாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் இடையேயான கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் நேற்று(செப் 2) வாக்குப்பதிவு முடிந்தது. வெற்றியாளர் யார் என்ற முடிவு செப்டம்பர் 5 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு அறிவிக்கப்படும். பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற நபர் செப்டம்பர் 6 ஆம் தேதி, … Read more

2024 இல் மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் என விரும்புகிறேன் – பாபுல் சுப்ரியோ!

2024 இல் மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் என விரும்புகிறேன் என பாபுல் சுப்ரியோ விருப்பம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் முக்கியமான பாஜக தலைவராக இருந்தவர் தான் பாபுல் சுப்ரியோ. கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது பாபுல் சுப்ரியோவிடமிருந்து இணை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவருக்கு அமைச்சரவையிலும் இடம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அதிருப்தி அடைந்த நிலையில், பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்து விலக உள்ளதாக தந்த முகநூலில் பதிவிட்டு இருந்தார். … Read more

பிரதமர் மோடி காணொலி வாயிலாக இங்கிலாந்தில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார்!

இங்கிலாந்தில் ஜூன் 11 முதல் 13 ஆம் தேதி வரை ஜி-7 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்கிறார். இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய ஜி 7 அமைப்பின் மாநாடு இங்கிலாந்திலுள்ள கார்ன்வால் எனுமிடத்தில் ஜூன் 11 முதல் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.  இந்த ஜி-7 மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இங்கிலாந்து … Read more

நேபாள் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பை இழந்தார் பிரதமர் ஓலி !

நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் பிரதமர் பதவி ராஜினாமா செய்தார் கே.பி. ஓலி. நேபாளத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த மாவோயிஸ்ட் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது.இதனையெடுத்து திங்கள்கிழமை நேபாள பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி க்கு 93 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர், மேலும் 124 பேர் எதிராகவும், 15 பேர் நடுநிலையாகவும் இருந்தனர், இதனால் பிரதமர் ஓலி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார். மேலும் சபையில் … Read more

கடினமான கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்கள்…! பதிலளிக்க முடியாமல் பத்திரிக்கையாளர்கள் மீது சானிடைசரை ஊற்றிய பிரதமர்…!

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலையில் அவர்கள் மீது சனிடைசர் தெளித்த தாய்லாந்து பிரதமர். தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம், 2014-ம் ஆண்டு ராணுவ புரட்சியின் போது, கிளர்ச்சியை தூண்டியதாக பிரயுத் சான் ஓச்சாவின் அமைச்சரவயை சேர்ந்த 3 மந்திரிகள் மீது அப்போது வழக்கு தொடரப்பட்டது. 7 வருடங்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக 3 அமைச்சர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். எனவே காலியான … Read more

2வது முறையாக பிரதமரானர் ஜசிந்தா! கர்ஜிக்கும் பெண்சிங்கம்

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். நியூசிலாந்து பொதுத்தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி பெற்றுள்ளார். நியூசி.,நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான பிரதமர் ஜசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 % வாக்குகளைப் பெற்றது. நாடளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை கைப்பற்றிய தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பொதுத்தேர்தலில் வெற்றி குறித்து பிரதமர் ஜசிந்தா கூறுகையில் அடுத்த … Read more

கேள்விக்குறியாகி ஒலியின் பதவி??காத்மாண்டுவில் கதகதப்பு!

நேபாள பிரதமரின் பதவிக்கு எதிராக காத்மண்டுவில் குரல் எதிரொலிக்க துவங்கியுள்ள நிலையில் கட்சியின் நிலைக்கூட்டம் நாளை கூடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. நேபாள  நாட்டில் பிரதமர்  பதவி வகித்து வருபவர் கே.பி.ஷர்மா ஒலி இவரை அப்பதவி இருந்து விலகுமாறு கூறி ஆளுகின்ற நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கடும் போர்க்கொடி துாக்கி உள்ள நிலையில் அவசரமாக மீண்டும் நாளை கட்சியின் நிலைக்குழு கூட்டம் குறித்து  தகவல் வெளியாகி உள்ளதுநடக்கிறது. கூட்டத்தில் நேபாள பிரதமர் ஒலியின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட … Read more