அழிந்து வரும் அமேசான் காடு! உதவிக்கரம் நீட்டிய பிரபல நடிகர்!

கடந்த சில வாரங்களாகவே பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில், காட்டு தீ பரவி வருகிறது. இதனால், பல வகையான விலங்குகள், மரங்கள், பூச்சிகள் என அனைத்துமே அழிந்து வருகிறது. இந்த பாதிப்பினால் அமேசான் காட்டு பகுதியே புகை காடாக மாறியுள்ளது. இந்நிலையில், டைட்டானிக் ஹீரோ லியானார்டோ டிகாப்ரியோ சுமார் 5 மில்லியன் டாலர் நிதியை அமேசான் காட்டை பாதுகாப்பதற்காக வழங்கியுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.35 கோடியாகும்.

இறந்த குரங்கை கட்டியணைத்து அழும் தாய் குரங்கு! இதன் உண்மை பின்னணி என்ன?

கடந்த மூன்று வாரங்களாக அமேசான் காடு தீ பற்றி எரிந்துக் கொண்டு இருக்கிறது. இதனால் பிரேசில் முழுவதும் புகை மூட்டமாக மாறி உள்ளது. இதனால், அமேசான் காட்டில் உள்ள பல வகையான மிருகங்கள், பூச்சி இனங்கள், பறவைகள் ஆகியன அழிந்துள்ளன. இந்நிலையில், அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில், இறந்த தன் குட்டி குரங்கை தாய் குரங்கு மார்போடு கட்டியணைத்து அழுவது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த புகைப்படத்தை ஷேர் செய்து #prayforamazon … Read more