நேசமணிக்காக பிரார்த்திக்கும் தளபதி 63 படக்குழு!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். தற்போது, சமூக வலைத்தளங்களில் pray for nesamani என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிற நிலையில், இதுகுறித்து தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், தளபதி 63 படம் பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமில்லை. நேசமணிக்காக பிரார்த்திப்பதாக, தனது ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இனிமேல் நான் சினிமாவில் நடிப்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது : நகைசுவை நடிகர் வடிவேலு

தமிழ் சினிமாவின் நகைசுவை நடிகர் என்ற பெருமை வடிவேலுவை மட்டுமே சாரும். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நேசமணி கேரக்டெர் குறித்து நடிகர் வடிவேலு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது, நான் வாழக் கூடாது. என்னை சாகடிக்க வேண்டும் என்று என்னை அழிப்பதற்கு, தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்து விட்டார்கள் என்றும், ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதை பற்றி நான் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், … Read more

pray for nesamani புகைப்படத்தை காவல்துறையினர் எப்படி பயன்படுத்தியுள்ளார்கள் தெரியுமா?

முகநூலில் சுத்தியல் புகைப்படத்தை வெளியிட்டு, அதற்க்கு பதிவிடப்பட்ட பதிலால், pray for nesamani என்ற ஹேஸ்டேக் சமூக வலைத்தளங்கள் முழுவதும் ட்ரெண்டானது. தற்போது, pray for nesamani என்ற வாசகம் அடிக்கப்பட்ட டி-ஷார்ட்டுகளும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில், பலரும் பல விதமாக இதனை பயன்படுத்தினாலும், காவல்துறையினர் இதனை வித்தியாசமான முறையில் பயன்படுத்துகின்றனர். நேசமணி தலையில் சுத்தியல் விழுவது போன்ற புகைப்படத்தில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், விபத்துக்களை தவிர்க்க, தலைக்கவசம் அணிவீர் என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளனர்.

அடேங்கப்பா! t-shirt வரை வந்துடானுங்களா! pray for nesamani டி-ஷார்ட்! இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

முகநூல் பக்கத்தில் சுத்தியல் குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலால், இன்று உலகம் முழுவதும் #pray for nesamani என்ற ஹேஸ்டேக் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த பின்னலாடை நிறுவனம் “pray for nesamani” என்ற வாசகங்கள் அடங்கிய டி-ஷார்ட்டுகளை தயாரித்துள்ளது. இந்த டி-ஷார்ட்டுகள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.