இன்று தைத்திருநாள்…பொங்கல் வைக்க உகந்த நேரம் இதுதான்..!

இன்று (14.01.2022) தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்று தெரிந்து கொள்ளுங்கள்.பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மகர சங்கராந்தி இந்த வருடம் மாலை நேரத்தில் பிறக்கவிருக்கிறது. தைத்திருநாளை முன்னிட்டு இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில்,பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்று தெரிந்து கொள்ளுவது அவசியம். அதன்படி,2022 ஆம் ஆண்டு பிலவ வருடம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.20 க்கு மேல் பிறக்கிறது.சூரிய பகவான் மகர ராசிக்கு மாலை 5.20-க்கு பெயர்ச்சியாக இருக்கிறார்.இதற்கிடையில்,உத்தராயண … Read more

மகிழ்ச்சி…6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை – அரசு அறிவிப்பு!

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று,கொல்லம்,இடுக்கி,வயநாடு, பத்தனம்திட்டா,பாலக்காடு,திருவனந்தபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (ஜன.14) பொங்கல் விடுமுறை அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 ஆம் தேதியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரி,கேரள முதலமைச்சருக்கு,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில்,தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பண்டிகைக்கு உள்ளூர் … Read more

பொங்கல் வாழ்த்து தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட்..!

மக்கள் மனதில் இன்பம் பொங்கிட, விவசாயிகள் வாழ்வில் துயர் நீங்கிட, உலகெங்கும் வாழ்கின்ற தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘மக்கள் மனதில் இன்பம் பொங்கிட, விவசாயிகள் வாழ்வில் துயர் … Read more

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ – தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என தமிழில் கூறி தமிழ்மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் அவர்கள், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என தமிழில் கூறி … Read more

“தமிழர்களின் உள்ளத்தில் அன்பு பொங்கட்டும்”- முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

தமிழர்களின் உள்ளத்தில் அன்பு பொங்கட்டும்;இல்லத்தில் மகிழ்வு பொங்கட்டும் என்று கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தை முதல் நாளான ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.இந்த நிலையில்,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும்.தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளையட்டும் எனவும்,அனைவருக்கும் தை முதல் நாளாம்,இனிய பொங்கல் – இன்பத் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகள் என்று கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,திமுக உடன்பிறப்புகளுக்கு … Read more

ஜன.16 அன்று பயணம் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திரும்பி தரப்படும் – போக்குவரத்து துறை

ஜனவரி-16 அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டு நாட்களில் அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு … Read more

“பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கா?” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த தகவல்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ஏற்கனவே பிறப்பித்த தமிழக அரசு,அதனை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.எனினும்,கொரோனா அதிகரிப்பின் காரணமாக பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ? என்று மக்கள் நினைக்கின்றனர். இந்நிலையில்,பொங்கல் பண்டிகைக்கு பிறகு … Read more

“கலங்கும் பொங்கல் கரும்பு விவசாயிகள்…கண்ணீரைத் துடைக்குமா தமிழக அரசு?” – ராமதாஸ் கேள்வி!

ஒப்பந்தம் செய்யப்பட்ட கரும்பை வாங்கிக் கொள்ள இடைத்தரகர்கள் மறுப்பதும்,மற்றொருபுறம் விவசாயிகளிடமிருந்து ஒரு கரும்பைக் கூட அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்யாதது ஆகியவை தான் கரும்பு உழவர்களின் கண்ணீருக்கு காரணமாகும் என்று கூறி,இவர்களின் கண்ணீரை தமிழக அரசு துடைக்குமா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பொங்கல் பரிசு வினியோகம் தொடங்கி இன்றுடன் ஒரு வாரம் ஆகும் நிலையில்,இதுவரை உழவர்களிடமிருந்து ஒரு கரும்பு கூட நேரடியாக கொள்முதல் செய்யப்படவில்லை.அதற்கு காரணம் அதிகார வர்க்கமும், இடைத்தரகர்களும் தீட்டி … Read more

குட்நியூஸ்…இன்று முதல் ஜன.13-ம் தேதி வரை – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

சென்னை:இன்று முதல் ஜன.13-ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில்,தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் … Read more

#BREAKING: பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை- துணை நிலை ஆளுநர் அறிவிப்பு..!

புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு. புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை எனவும் வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் என என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும், காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.