“மாணவி தற்கொலை:தங்கள் அரசியலுக்காக கையில் எடுப்பது வருத்தம்” – பள்ளி நிர்வாகம் விளக்கம்!

மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரத்தை,தங்கள் அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் கையில் எடுப்பது வருத்தம் அளிக்கிறது என்று பள்ளி நிர்வாகம் விளக்கம். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,மாணவியின் லாவண்யாவின் இறப்பு குறித்து,தங்கள் அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் கையில் எடுப்பது வருத்தம் அளிக்கிறது என்று … Read more

அதிமுகவில் மாற்றம் அவசியம் – செல்லூர் ராஜூ

தலைமையை நம்பி அதிமுக இல்லை, தொண்டனை நம்பியே அதிமுக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல். அதிமுகவில் சில மாற்றம் செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் இளைஞர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய செல்லூர் ராஜூ, தலைமையை நம்பி அதிமுக இல்லை என்றும் தொண்டனை நம்பியே அதிமுக உள்ளது எனவும் … Read more

தமிழகத்தில் இவைகளுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை தடை – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

தமிழகத்தில் திருவிழா,அரசியல் உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகளுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை தடை விதித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, நடைமுறையில் உள்ள கோவிட்-19 கட்டுப்பாடுகளை, 15.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டித்து ஏற்கெனவே அரசு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 27.5.2021 அன்று 36,000-க்கும் மேற்பட்ட அளவில் இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது நாள் தோறும் சுமார் 1600 புதிய நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. … Read more

அரசியலில் சேர ஆர்வம் காட்டும் ஜாக்கி சான் …..!

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வம் உள்ளதாக நடிகரும், தற்காப்பு கலை நிபுணருமாகிய ஜாக்கி சான் கூறியுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரும், தற்காப்பு கலை நிபுணருமாகியவர் தான் ஜாக்கி சான். இவர் நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர். தனது 8 வயது முதலே நடிக்கத் தொடங்கிய இவர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். சீன பிரபலம் ஜாக்கி சானுக்கு உலகம் முழுதுமுள்ள பல கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக உள்ளனர். குறிப்பாக, தமிழகத்திலும் இவருக்கு … Read more

அதிகரிக்கும் கொரோனா ! “மக்கள் நலனைக் காக்க ஒன்றிணைவோம் வாருங்கள்”- மு.க.ஸ்டாலின்

கொரொனோ 2வது அலை ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் “மக்கள் நலனைக் காக்க ஒன்றிணைவோம் வாருங்கள்” என்று தமது கட்சி உடன்பிறப்புகளுக்கு தி.மு.க.தலைவர்.ஸ்டாலின் வலியுறுத்துகிறார். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரொனோ பரவல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்,”தேர்தல் நேரம் மட்டுமல்லாமல் அனைத்து நேரத்திலும் மக்களுடன் இணைந்துள்ள இயக்கம்தான்  திராவிட முன்னேற்ற கழகம்.கடந்த ஆண்டு இதே கொரொனோ பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவிட ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் மக்களுக்கு உணவு,மருத்துவ வசதி  போன்ற … Read more

அரசியலுக்கு வருவீங்களா…? சிரித்து கொண்டே பதிலளித்த சிவகார்த்திகேயன்..!

நேற்று கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர் ஒருவர் நீங்கள் அரசியலிற்கு வருவீங்களா என்ற கேள்வி கேட்டார்.அதற்கு சிரித்துக் கொண்டே சிவகார்த்திகேயன் நான் அரசியலிற்கு வரமாட்டேன் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தொடர்ந்து 3,மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, ஹீரோ, … Read more

எம்.பி சீட் யார் கொடுத்தாலும் அவர்கள் பக்கம் சேர்ந்து கொள்ளுவேன் – நடிகர் சந்தானம்!

யார் தனது ராஜ்யசபையா எம்.பி சீட் கொடுத்தாலும் அங்கு சேர்ந்து கொள்ளுவேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானம் நக்கலாக பேசியுள்ளார். நடிகர் சந்தானம் இயக்குனர் ஜான்சன் கே அவர்களின் இயக்களின் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் எனும் புதிய படமொன்றில் நடித்திருக்கிறார். ஆ.வில்சன் அவர்களின் ஒளிபதில்வில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த ப டம் வருகின்ற 12 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் … Read more

விஜயை யாரோ குழப்புகிறார்கள், என்னை போல தந்தை கிடைப்பது பெரிய விஷயம்!

விஜயின் எதிர்காலம் குறித்து தான் யோசிப்பது தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும், தன்னை போல தந்தை கிடைப்பது பெரிய விஷயம் எனவும் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் விஜய் பெயரில் கட்சி துவங்க இருப்பதாக அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அறிவித்த நிலையில், இது குறித்து பல சர்ச்சைகள் எழும்பியது. இதையடுத்து விஜய் தனக்கும் அந்த கட்சிக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி ஒதுங்கி இருந்த நிலையில், தற்போது … Read more

ரஜினியுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும் – ப.சிதம்பரம் ஆவல்

ரஜினிகாந்தின் அறிவிப்பை ஒரு நலம்விரும்பியாக நான் ஆதரிக்கிறேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு. ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்ற அறிவிப்பை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய இனிய நண்பர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்த முடிவினை அவருடைய நலம் விரும்பி என்ற முறையில் நான் வரவேற்கிறேன். ரஜினிகாந்த் ஒரு தார்மீக சக்தியாக விளங்கியவர், விளங்குபவர், விளங்குவார் என்பதில் எனக்கு ஐயமில்லை. 1996-ஆம் … Read more

அதிமுகவிற்கு எல்லாம் சாதகம் தான் – அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்!

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும், தொடங்கவிட்டாலும் அனைத்தும் அதிமுகவிற்கு சாதகமாகவே அமையும் -அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்  ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும், தொடங்கவிட்டாலும் அனைத்தும் அதிமுகவிற்கு சாதகமாகவே அமையும் என்றும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கூறியுள்ளார். இதுபோன்று, ரஜினி எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்கு தான் இருக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, ஜனவரியில் புதிய … Read more