நடிகை த்ரிஷா சர்ச்சை விவகாரம்: முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு!

Mansoor Ali Khan

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, மன்சூர் அலிகானை கைது செய்து விசாரிக்கலாமா அல்லது விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பலாமா என காவல்துறையினர் ஆலோசித்து வந்தநிலையில், மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க சென்னை ஆயிரம் விளக்கு போலீசார், 41a எனப்படும் நோட்டீஸ்-ஐ அனுப்பியுள்ளனர். மேலும், அவர் மீது NWC வழக்குப்பதிவு … Read more

குறித்த நேரத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை… ஒட்டுமொத்த போலீஸ் ஸ்டேஷனும் சஸ்பெண்ட்.!

ஹரியானா மாநிலத்தில் சுக்புரா காவல் நிலையத்தில் தாமதமாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ததற்காக பணியாற்றிய அனைத்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து அரியானா உள்துறை அமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.  அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தலைமையில், கடந்த வெள்ளிக்கிழமை, விகாஸ் பவனில் வைத்து மாவட்ட மக்கள் தொடர்பு மற்றும் குறைதீர்ப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 25 புகார்கள் குறிப்பிடப்பட்டது. அதில் ஒரு புகாராக, போலீசார் தாமதமாக வழக்குப்பதிவு … Read more

Breaking:”அனைத்து காவல்நிலையங்களிலும் இதனை உடனடியாக நீக்க வேண்டும்” – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

காவல் நிலைய பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ள விளம்பரதாரரின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அனைத்து காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை மூலம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது,தமிழகத்தில் உள்ள சில காவல் நிலையங்களில் தனியார் விளம்பரப்பலகைகள் இடம் பெற்றிருப்பது பொதுமக்கள் பார்வையில் தவறான புரிதலை ஏற்படுத்துகிறது,எனவே,அனைத்து காவல் நிலைய பெயர் பலகைகளில் காவல்நிலைய பெயரைத் தவிர, விளம்பரதாரரின் பெயர்கள் … Read more

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் சில பதிவுகள் கிடைத்துள்ளது- ஐஜி சங்கர்!

தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்பொழுது அதில் சில பதிவுகள் கிடைத்துள்ளதாக ஐஜி சங்கர் தெரிவித்தார். சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிந்ததாக கூறப்பட்டது. இதனை தொழில்நுட்பம் மூலமாக … Read more

சாத்தான்குளம் வழக்கு: சிசிடிவியை ஆப்பரேட் செய்த காவலர் ஆஜர்.. மாஜிஸ்திரேட் விசாரணை!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆப்பரேட் செய்த காவலர் தாமஸ் பிரான்சிஸிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆப்பரேட் செய்த … Read more

காவல் நிலையத்திலேயே மாப்பிளையை அடித்து மணப்பெண்ணை கடத்தி சென்ற அதிர்ச்சி சம்பவம்.!

கன்னியாகுமரியில் காதலர்கள் இருவரும் வீட்டார்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த காதலனை சரமாரியாக தாக்கியதோடு காதலியை காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாக தெரிகிறது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் தாசம்மாள். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் 28 வயதான பியூட்டலின். இவரும் வெள்ளிச்சந்தைப் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணும் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் … Read more

காவல் நிலையத்தில் தீ விபத்து..! ஊழல் சம்பமந்தமான பிரதிகள் எரிந்தன..!

பாட்னாவில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் திடீர்ரென முதல் தளத்தில்  தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தில் முதல் தளத்தில் வைக்கப்பட்டு இருந்த பீகார் பள்ளி தேர்வு ஊழல் தொடர்பான சில பிரதிகள் தீப்பிடித்தன. தீ பிடித்த பிரதிகளால் இந்த வழக்கில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஏஎஸ்பி ஸ்வர்ன் பிரபாத் தெரிவித்தார். … Read more

காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு..!

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில்  பெண் காவலருக்கு  சக காவலர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். அண்ணா சாலை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக வேலை செய்து வருபவர் ஷில்பா. இவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு சக காவல் நிலையத்தில் வேலை செய்யும் காவலர்கள் சேர்ந்து ஷில்பாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். மேலும் வீடுகளில் குடும்பத்தினர் போன்று சீர் வரிசைகள் கொடுத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

காவல்நிலைத்திற்குள் நைட்டி, சார்ட்ஸ் உடைகளுடன் செல்ல தடை! திருப்பூர் காவல்நிலையம் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்நிலையம் திருமுகன்ப்பூண்டி காவல்நிலையம். இந்த காவல்நிலையத்தில் ஒரு அறிவிப்பு நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதென்னவென்றால், காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வெறுப்பவர்கள் நைட்டி மற்றும் சார்ட்ஸ் அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளானர். மேலும் லுங்கி அணிவதையும் தவிர்க்குமாறு காவல்துறையினர் கூறுவதாக பொது மக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து, மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் உமா அவர்கள்  கூறுகையில், அந்த அறிவிப்பில் இருக்கும் உடை கட்டுப்பாடு கட்டாயம் அல்ல … Read more

“ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையம்”மீது குண்டுகளை வீசி தீவிரவாதிகள் அட்டூலியம்…!!காவலர் உயிரிழப்பு..!!!

ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் போலீசார் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு-காஷ்மீர்: தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் மீது அதிகாலையில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர் மேலும் காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஒரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே இந்த சம்பவ நிகழந்த இடத்துக்கு வந்த பாதுகாப்புப் படையினர், … Read more