பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது !

தாய்லாந்தில் மரியம் என்ற கடற்பசு நெகிழிப் பொருட்களை சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அதை கவனித்த வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு அந்த  கடற்பசுவை  மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்தனர். அவ்வபோது கடற்பசு உடல்நலம் குறித்து ஃபேஸ்புக்கில் வீடியோக்கள் பதிவு செய்து வந்தனர். இதனால் தாய்லாந்து மக்களின் மத்தியில் அந்த கடற்பசு அதிகமாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் 8 மாதம் ஆன அந்த மரியம் கடற்பசு இன்று காலை … Read more

காலி ஆவின் பால் கவர்களுக்கு காசு!ஆவின் பால் நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு!

நமது அன்றாட வாழ்வில் பால் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. அந்தவகையில் நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். தினமும் நாம் பால் உபயோகித்து வருகிறோம். இந்நிலையில், தமிழக அரசு மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழி பொருட்களுக்குத்தடை விதித்த நிலையில், பால் உட்பட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆவின் நிர்வாகம் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில், ஆவின் பால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. … Read more

பிளாஸ்டிக் குப்பை எடுத்து வந்தால் இலவச சாப்பாடு !

சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாநகராட்சியில் கார்பேஜ் கஃபே என்ற பெயரில் உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்திற்கு ஒரு கிலோ பிளாஸ்டிக் எடுத்து வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி மேயர் அஜய் திர்க்  கூறும்போதுஒரு கிலோ பிளாஸ்டிக் எடுத்து வந்தால்  மதிய உணவும் ,  அரை கிலோ பிளாஸ்டிக் எடுத்து வந்தால் காலை உணவும் வழங்கப்படுகிறது.   இந்த திட்டம் குப்பை பொறுக்குவோருக்கும் , நடைபாதையில் வசிக்கும் மக்களுக்கு உதவியாக உள்ளது. அடுத்த கட்டமாக … Read more

242 டன் பிளாஸ்டிக் பறிமுதல் ! இனி பயன்படுத்தினால் 100 முதல் 1 லட்சம் வரை அபராதம்!

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு  தடை செய்து தமிழக அரசு உத்தரவு விட்டது.ஆனால் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக பயன்டுத்துவதாக புகார் எழுந்த நிலையில் சென்னையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவர்கள் கண்காணிக்க சென்னை மாநகராட்சி வார்டு அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழு இதுவரை 242 டன்னுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்கவும், மேலும் மாநகராட்சி அனுமதி பெறாமல் கடை இயங்கி … Read more

#TrashtagChallenge: பிளாஸ்டிக் குறித்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் சேலஞ்ச்

சமூக வலைத்தளங்களை எடுத்துக்கொண்டால் அதை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பேஸ்புக்,ட்விட்டர்,வாட்ஸ் அப்,இன்ஸ்டாகிராம்  உள்ளிட்ட  இணையதளங்களின் பயனாளர்கள் அதிகம்.அதிலும் ட்விட்டரை எடுத்துக்கொண்டால் அதிகமாக ஒரு  ஹேஷ்டேக்கை பயன்படுத்தினால் அது சிறிது நேரத்திலே  ட்ரெண்டாகிவிடும். இந்நிலையில் பிளாஸ்டிக் மூலம் ஏற்படும்  பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பலவகையில் முயற்சி நடைபெற்று வருகிறது.அந்த வகையில் தற்போது  சமுக வலைத்தளங்களில் #TrashtagChallenge என்ற ஹேஷ்டேக் பிரபலமடைந்து வருகின்றது . இதன்படி குப்பைகளால் அசுத்தம் அடைந்திருக்கும் பகுதியினையும் சுத்தம் … Read more

வடபழனியில் பிரபல உணவகத்தில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் இருந்து ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள பிரபல உணவகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் அந்த … Read more

மதுபான பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை- டாஸ்மாக் பொதுமேலாளர்…!!

சேலத்தில் மதுபான பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் பொதுமேலாளர் எச்சரித்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், சேலம் நகர்ப்பகுதியில் உள்ள மதுபான பார்களில், டாஸ்மாக் பொதுமேலாளர் முத்துராமலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மத்திய பேருந்து நிலையம் அருகே இருந்த பாரில் ஆய்வு செய்தபோது, முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிளாஸ்டிக் இல்லாத பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துமாறு பார் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

வருகிறது தடை..!!தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒப்படைக்க டிச..,31 கடைசி எச்சரிக்கை..!தயாரித்தால் கடும் நடவடிக்கை.!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் டிச.31 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று  மாநகராட்சி கடைசி காலகேடுவினை அறிவித்துள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், தெர்மோக்கோல், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் மட்டும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு அடுத்தாண்டு முதல் அதாவது ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடைவிதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்கும் … Read more

மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு…!

தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு ஜனவரி 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

12 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பை கடலில்!!!

உலகில் பிளாஸ்டிக் உபயோகித்தல் மிகவும் அதிகமாகி வருகிறது . இதனால் கடலில் குப்பைகளாக கலக்கும் பிளாஸ்டிக் அளவு அதிகரித்துள்ளது. இது வருடம் முழுவதும் அதிகரித்து வருகிறது. 2010ஆம் ஆண்டுப்படி கடலை மாசுபடுத்திய பிளாஸ்டிக்கின் அளவு 12 மில்லியன் மெட்ரிக் டன்கள் ஆகும். இதன் மூலம் பூமியின் மொத்த கடல்பரபப்பையும் மூட முடியும்.  இந்த ஆண்டின் பிளாஸ்டிக் தயாரிப்பு 266 மில்லியன் மெட்ரிக் டன்கள் 2014ஆம் ஆண்டு ஆய்வுப்படி கடலில் 2,70,000 டன் எடையில் 5.25 ட்ரில்லியன் பிளாஸ்டிக் … Read more