மும்பையில் 2,000 கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

மும்பையில் 2,000 கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கடந்த இரண்டரை மாதங்களில் 2,000 கிலோவுக்கும் அதிகமான தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கைக் கைப்பற்றியது. மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தும் கடைகள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து ₹16 லட்சம் அபராதமும் வசூலித்துள்ளது. தடை செய்யப்பட்ட அதாவது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு எதிரான இயக்கம் ஜூலை 1 முதல் மும்பை சிவில் அமைப்பால் நடைமுறைப்படுத்தப்பட்டது … Read more

#BREAKING: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் – மாநகராட்சி எச்சரிக்கை

கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை என மாநகராட்சி எச்சரிக்கை. கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாக பராமரிக்கப்படும் 3 இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலை, மாலை என இரு வேளைகளில் … Read more

ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..! மீறினால் அபராதம் எவ்வளவு தெரியுமா..?

நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு  நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. குறைந்த பயன்பாடு மற்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஜூலை 1 முதல் … Read more

#BREAKING: நெகிழி பொருள் தயாரிப்பு -தகவல் கொடுத்தால் பரிசு..!

தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் பற்றி தகவல் அளித்தால் வெகுமதி தரப்படும். தடைசெய்யப்பட்ட நெகிழி பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் பற்றி தகவல் அளித்தால் வெகுமதி வழங்கப்படும் என தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தி கைவிடப்படும் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி பயன்பாட்டுக்கு 2018 ஆம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முதல் தடை உள்ளது. பிளாஸ்டிக்பை, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டு, தர்மாகோல் கப்பு, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை … Read more

பிளாஸ்டிக் பைகளில் பறவைகள் கூடுகட்டும் அவலநிலை..!

பிளாஸ்டிக் பைகளை கொண்டு நீர்பறவைகள் கூடு கட்டுவதால் பறவையினங்கள் அழியும் அபாயநிலை ஏற்படும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் உதகை பகுதிகளில் தற்போது இருக்கும் காலநிலையால் பல்வேறு பகுதியிலிருந்து பறவைகள் வருவது வழக்கம். பறவைகள் வந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும். இந்த நேரத்தில் இந்தியன் ரோலர், கார்மரண்ட், யுரேஷியன் கூட், மலபார் விஸ்லிங் திரஸ், கிங்பிஷர் ஆகிய பறவைகள் இந்த இடத்திற்கு வரும். இந்த பறவைகள் பொதுவாக தாமரை தண்டுகள், … Read more

அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் பிளாஸ்டிக் கழிவு 3 மடங்கு உயரும்!

அரசும் தனியார் நிறுவனங்களும் பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்காவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் எச்சரித்துள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முடியாமல் உலகமே திணறி வருகிறது. இந்நிலையில், அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்க முயலாவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்க கூடிய பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவுகள் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்றால் முகக் கவசங்கள், கையுறைகள், … Read more

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் அன்பரசன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைந்துள்ளது என்றும் சுமார் 1500 டன் அளவிற்கு பிளாஸ்டிக் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்த விவாதத்தின் போது, குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , தடை செய்யப்பட்ட 14 வகையான … Read more

இனி பிளாஸ்டிக் கொடுத்தால் இலவசமாக மெட்ரோவில் பயணம்..!

பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை கொடுத்துவிட்டு மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்யலாம் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக ரோம் நகரில் உள்ள ஜியோவானின் மெட்ரோ  நிலையத்தில் இந்தத் திட்டம் தொடங்கியுள்ளது. அங்கு உள்ள mycicero என்ற செயலியை உள்ள  பார்கொட்டை ஸ்கேன் செய்து பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தில் செலுத்த வேண்டும். அப்படி கொடுத்த பிறகு அவர்களுக்கு மெட்ரோ பயணத்திற்கான பணம் ஏறிவிடும் இதை இத்தாலி சுற்றுச்சூழல் மற்றும் … Read more

பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை-பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக  பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில், நாளை முதல் அக்டோபர்  1-ஆம் தேதி வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை -ரயில்வே அமைச்சகம்…!

சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசிய போது “மகாத்மா காந்தி 150- வது பிறந்த நாளை கொண்டாடும் நேரத்தில் ஒருமுறை மட்டுமே  பயன்படுத்தப்படும்  பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்” என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் இதை தொடர்ந்து ரயில்வே அமைச்சகம் 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என அறிவித்து உள்ளது. அக்டோபர் 2-ம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மறு சுழற்சி … Read more