தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு அமலுக்கு வந்தது…!

பெட்ரோல் மீதான லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5, டீசல் விலை ரூ 3 குறைக்கப்படும்” என அறிவித்தனர். சமீபத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, பெட்ரோல் டீசல் மீதான வரியில் மத்திய அரசு அதிக பங்கை எடுத்துக் கொள்கிறது. அதனால், பெட்ரோல் டீசல், விலையை குறைக்க தற்போது சாத்தியமில்லை … Read more

#BREAKING: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு – நிதியமைச்சர் அறிவிப்பு..!

பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது. பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஏழை நடுத்தர மக்களின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் ரூ. 3 குறைக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார் என தெரிவித்தார். பெட்ரோல் மீதான வரி குறைப்பால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். பெட்ரோல் வரி குறைப்பு உழைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் என தெரிவித்தார்.

செல்போனில் பதிவு செய்தால் இருப்பிடம் தேடி வரும் பெட்ரோல், டீசல்…!

சென்னை, அம்பத்தூருக்கு அருகே உள்ள கள்ளிகுப்பம் பெட்ரோல் நிலையத்தில், தொலைபேசி மூலம் பதிவு செய்தால், இருப்பிடம் தேடி சென்று பெட்ரோல் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, அம்பத்தூருக்கு அருகே உள்ள கள்ளிகுப்பம் பெட்ரோல் நிலையத்தில், தொலைபேசி மூலம் பதிவு செய்தால், இருப்பிடம் தேடி சென்று பெட்ரோல் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் தேவைப்படும் நிறுவனங்கள் மற்றும் பாதி வழியில் நிற்கும் வாகன ஓட்டிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல் … Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வந்த எம்.பி!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்.பி சைக்கிளில் வந்து உள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து, அவையை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அசாம் மாநில ராஜ்யசபா எம்பி ரிபுன் போரா … Read more

“உலகிலேயே அதிக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா” – எலான் மஸ்க்

“உலகிலேயே அதிக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா” என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெட்ரோல் விலை ரூ. 100 ஐ தாண்டியுள்ளது, மேலும் டீசல் விலை ரூ. 100 ஐ நெருங்கி வருகிறது. இதனால் பலரது வாகனங்களை வெளியில் எடுத்து செல்லமுடியாமல் வீட்டிலேயே வாகனங்களை முடக்கி வைக்கும் நிலை வந்துள்ளது. இதனால் பலரும் சைக்கிளுக்கு மாறி வருகின்றனர். மேலும், … Read more

ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்…!

சென்னையிலுள்ள கடை ஒன்றில் 750 ரூபாய் பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படுகிறது.  நாடு முழுவதும் தற்பொழுது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையிலுள்ள பிரியாணி கடை ஒன்றில் ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படுகிறதாம். சென்னையிலுள்ள தொப்பி வாப்பா … Read more

மனதின் குரல் என்பதற்கு பதில் பெட்ரோலின் குரல் என வையுங்கள் – மம்தா பானர்ஜி!

பிரதமர் மோடி மான் கி பாத் என்பதற்கு பதிலாக பெட்ரோல் கி பாத் அல்லது டீசல் கி பாத் என வைத்திருக்கலாம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கூறியுள்ளார். நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பேசினார். அப்போது பேசிய அவர் மத்திய அமைச்சரவையிலிருந்து பாபுல் சுப்ரியோ அவர்கள் நீக்கப்பட்டுள்ள நிகழ்வு மூலம் வருகிற 2024 ஆம் ஆண்டில் நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்க முடியாது … Read more

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை விஷம் போல ஏறிக்கொண்டிருக்கிறது – டிடிவி தினகரன்!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை விஷம் போல ஏறிக்கொண்டிருக்கிறது, இதை கட்டுப்படுத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வரும் நிலையில், நேற்று சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எரிபொருட்களின் விலை உயர்வை பல அரசியல் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் … Read more

வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் உயர்ந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை…!

வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.13 க்கு விற்பனை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி, தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும்,பெட்ரோல்,டீசல் விலையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அதன்படி,சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 99.80 … Read more

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் மீது வழக்கு!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதை கண்டித்து பீகாரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். பீகார் நீதிமன்றத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது பீகாரை சேர்ந்த சமூக ஆர்வலர் தமன்னா ஹாஸ்மி என்பவர் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு முசாபர்பூரில் உள்ள தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் … Read more