பரபரப்பு…விமானம் தரையிறங்கும்போது விபத்து – பயணிகள் காயம்!

மோசமான வானிலை காரணமாக மும்பையிலிருந்து துர்காபூருக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் போயிங் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விபத்தில் பயணிகள் சிலர் காயமடைந்த நிலையில்,அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விமான விபத்து தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூறுகையில்: “மும்பையிலிருந்து துர்காபூருக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் போயிங் பி737 விமானம் நேற்று தரை இறங்கும் போது மோசமான வானிலையை எதிர்கொண்ட நிலையில் விபத்து ஏற்பட்டது.துரதிர்ஷ்டவசமாக ஒரு சில பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டன.துர்காபூர் வந்தடைந்தவுடன் உடனடி மருத்துவ உதவி … Read more

சென்னை : சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து …!

சென்னையில் அரசு பேருந்து சுரங்கப்பாதையில் சிக்கிய நிலையில், பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. அதிலும் நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் அதிக கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சாலைகளில் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. மேலும் தண்ணீர் புகுந்ததால் பெரும்பாலான சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பயணிகளுடன் போரூர் மந்தைவெளி மார்க்கமாக சென்ற அரசு மாநகர பேருந்து … Read more

அமெரிக்கா : நவம்பர் 8 முதல் கோவாக்சின் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு அனுமதி ….!

நவம்பர் 8 முதல் கோவாக்சின் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு அமெரிக்காவிற்குள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய கொரோனா தடுப்பூ சியான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி முதல் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்காததால் பல … Read more

தீபாவளியை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் …!

தீபாவளியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களின் பயண சீட்டு முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாகவும், இதனால் 20க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி தாம்பரம் முதல் நாகர்கோவில், … Read more

செப்டம்பர் 12 முதல் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பலாம் ஆனால் இது கட்டாயம் !

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் க்கு திரும்ப இந்தியாவிலிருந்து வர அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் சரியான விசா வைத்திருந்தால் செப்டம்பர் 12 முதல் அனுமதி. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் க்கு பயணிக்க விரும்பும் பயணிகள் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மற்றும் முறையான விசா வைத்திருந்தால் அவர்கள் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) தெரிவித்துள்ளது. இந்த முடிவு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, … Read more

28 பேருடன் சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் மாயம்!

28 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் திடீரென மாயமாகியுள்ளது.  பெட்ரோபாவ்லோவ்ஸ்க் நகரிலிருந்து பலானாவுக்கு சென்றுகொண்டிருந்த ஏ.என்.26 என்னும் விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் கம்சட்கா ஏவியேஷன் எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த விமானம் 1982 ஆண்டு முதலே செயல்பட்டு வருவதாகவும் சீன நிறுவனமாகிய டாஸ் எனும் நிறுவனம் கூறியுள்ளது. காணாமல் போன விமானம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தேடுதல் பணிகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானம் பலானாவிற்கு … Read more

180 பயணிகளுடன் சென்ற நைஜீரிய கப்பல் கவிழ்ந்து விபத்து – 4 பேர் பலி, 156 பேர் மாயம்!

நைஜீரிய நாட்டின் வடமேற்கு கெப்பி மாநிலத்தில் இருந்து 180 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில், 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 156 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரிய நாட்டின் வடகிழக்கில் உள்ள கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலா நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக படகு ஒன்று 180 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. படகு புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். … Read more

விமானத்தில் ஆக்ஸிஜன் குறைவு..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 120 பயணிகள்..!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று முந்தினம் இரவு மலேசியா செல்ல இருந்த ஒரு விமானம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த பயணிகள் சிலர்  மூச்சு திணறுவதாக பயணிகள் விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது.அப்போது ஆக்ஸிஜன் அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அமைப்புகளில் கோளாறு இருந்ததால் விமானத்திற்குள் ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவாக இருந்தது. பின்னர்அந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டது. இதனால் 120 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  

ஆயுதபூஜையொட்டி சிறப்பு பேருந்துகள் மூலம் 4 ,79,250 பேர் பயணம்

ஆயுதபூஜையொட்டி, சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 4 ,79,250 பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். ஆண்டுதோறும் ஆயுதப்பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது.இந்த  ஆண்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினம் ஆகும். இந்த விடுமுறை தினங்களையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் .அந்த வகையில் இந்த முறையும் இயக்கப்படுகிறது. கடந்த  3-ஆம் தேதி சென்னையில் இருந்து வெளியூர் செல்வோருக்கான சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு  நடைபெற்றது. இந்த நிலையில் ஆயுதபூஜையொட்டி, சென்னையில் இருந்து … Read more

ஒரு ஷேர் ஆட்டோவில் 24 பேர் பயணம்! அபராதம் விதித்த காவல்துறையினர்! வைரலாகும் வீடியோ!

சாலை விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காகவும் அரசு பல்வேறு சாலை விதிகளை விதித்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், புவனகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 24 பேர் திருமண விழாவில் கலந்து கொண்ட பின், இவர்கள் அனைவரும் ஒரே ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளனர். ஒரு ஷேர் ஆட்டோவில் 6 பேர் மட்டுமே வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆட்டோவில் 24 பேர் வந்ததை, அந்த சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் … Read more