பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிக்கு 10 நாட்கள் பரோல் வழங்கி குஜராத் நீதிமன்றம் உத்தரவு

பில்கிஸ் பானு வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளிகளில் ஒருவருக்கு 10 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில், கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்ற போது ஏற்பட்ட கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் பேரில், 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கடந்த 2008ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 10-15 … Read more

10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வந்த பிஸ்டோரியஸ்..!

கடந்த 2013-ஆம் ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி ‘பிளேட் ரன்னர்’ என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க மாற்று திறனாளி தடகள வீரர் பிஸ்டோரியஸ் தனது சொந்த வீட்டிலேயே காதலி ரிவா ஸ்டீன்காம்பை சுட்டுக் கொன்றார். திருடன் என்று தவறாக நினைத்து தான் காதலி மீது துப்பாக்கியால் சுட்டதாக பிஸ்டோரியஸ் காவல்துறையிடம் கூறினார். இந்த கொலை சம்பவம் உலகையே அதிர வைத்தது. இந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடந்த முதல் விசாரணையில் பிஸ்டோரியஸ் குற்றமற்ற கொலைக்குற்றவாளி என  … Read more

#BREAKING: ஒரு மாத பரோலில் நளினி விடுவிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஒரு மாத பரோலில் விடுவிப்பு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை கவனித்துக்கொள்ள நளினியை பரோலில் விடுவிக்குமாறு தாய் பத்மா கோரிக்கை வைத்த நிலையில், பரோல் வழங்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவர் மனைவி … Read more

#Breaking:நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் – தமிழக அரசு முடிவு!

சென்னை:ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. வயது மூப்பின் காரணமாக தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், கடைசி காலத்திலாவது மகளுடன் இருக்க வேண்டும் … Read more

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு – தமிழக அரசுஉத்தரவு..!

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று உள்ளிட்ட பிரச்னை காரணமாக மருத்துவ சிகிச்சை அளிக்க 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து, கடந்த மே மாதம் 28-ம் தேதி பரோல் வழங்கப்பட்டது. சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேர் பரோலில் விடுவிப்பு- விசிக தலைவர் வலியுறுத்தல்..!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாக தண்டனை பெற்று வரும்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக, தமிழக அமைச்சரவையில் மீண்டும் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் அறிக்கை … Read more

#BREAKING: பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்…உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் 90 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்   30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.  இந்த உத்தரவு பெற்ற ஒரு வாரத்தில் பரோலில் அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பேரறிவாளன் விடுப்பிற்கு தமிழக அரசும், சிறைத்துறையும் எதிர்த்த … Read more

பரோல் விண்ணப்பம்.. வாரத்திற்குள் முடிவெடுக்க.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரத்திற்குள் முடிவெடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சேலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பரோல் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரிக்கும்போது, பரோலில் விடுதலையில் செல்லும் கைதிகளுக்கு பாதுகாப்பாக செல்லும் காவல்துறையினர் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு நீதிபதி, கைதிகளிடம் பரோலில் பணம் வாங்கினால் அதுவும் லஞ்சம் தான் என கூறினர். இதுபோன்ற … Read more

ராஜீவ்காந்தி கொலைவழக்கு : பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதலில் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.  பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.சிறைவாசம் அனுபவித்துவரும்  பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.அவரது தந்தையின் உடல்நலம்,அக்கா மகள் திருமணம் உள்ளிட்ட காரணங்களால் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது.2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 நாட்கள் பரோல் வாங்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும் … Read more

நளினி பரோலை நீட்டிக்க முடியாது..! உயர்நீதிமன்றம் ..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி தனது மகளின் திருமணத்திற்காக கடந்த ஜூலை 25-ம் தேதி பரோலில்  வெளிய வந்தார். நளினியின் பரோல் வருகின்ற 15-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிய உள்ள நிலையில்  தனது பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தார். நளினி அளித்த அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே 7 வாரங்கள் பரோல் கொடுத்து உள்ளதால் மேலும் நான்கு வாரங்கள் … Read more