பாரிஸ் விமான நிலையத்தில் 3 நாளாக தவித்த 300 இந்தியர்கள்.? நீதிபதிகள் அதிரடி உத்தரவு.! 

Legend Airlines

ருமேனியாவை தளமாகக் கொண்ட லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஏர்பஸ் ஏ-340-வானது கடந்த வியாழன் அன்று ஐக்கிய அரபு நாட்டில் இருந்து அமெரிக்காவில் நிகரகுவா எனும் இடத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 303 பயணிகள் பயணித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அதில் 11 சிறார்களும் அடக்கம். .24 மணிநேரத்தில் 201 பேர் பலி.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிடம் வலியுறுத்தல்.! இந்த விமானமானது, இடையில் எரிபொருள் நிரப்பும் பொருட்டு பாரிஸில் இருந்து 150 கிமீ தொலையில் வத்ரி … Read more

உலகக்கோப்பை தோல்வி எதிரொலி! பாரிஸில் வெடித்த கலவரம்.!

ஃபிஃபா உலககோப்பையின் பிரான்ஸ் தோல்வியை அடுத்து, அந்நாட்டின் பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் கலவரங்கள் வெடித்தன. ஃபிஃபா கால்பந்து உலககோப்பை 2022இன் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக அர்ஜென்டினா பெனால்டி முறையில் நடந்த டை-பிரேக்கரில் 4-2 என்ற கோல்கணக்கில் வென்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த தோல்வியை அடுத்து பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பல பிரெஞ்சு நகரங்களின் தெருக்களில் மோதல்கள் வெடித்ததால், கலவரத்தை அடக்க பிரெஞ்சு போலீசார், கால்பந்து … Read more

பாரிஸ் ஒலிம்பிக் 2024: வாகனங்களின் எண்ணிக்கையை 40 சதவீதம் குறைக்க ஒலிம்பிக் கமிட்டி முடிவு!!

பாரிஸ் உலகத் தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்டதாக அறியப்படுகிறது. மூன்று நாள் ஆய்வுக்குப் பிறகு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக்கில் பிரத்யேக வாகனங்களை நீக்கிவிட்டு, நகரத்திலேயே உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளது. விளையாட்டுகளுடன் அங்கீகாரம் பெற்ற பணியாளர்கள், அதிக பணவீக்கம் உள்ள காலங்களில் நகரின் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பார்கள். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) மூன்று நாள் ஆய்வுக்குப் பிறகு, ஏற்பாட்டுக் குழுவின் தலைமை நிர்வாகி எட்டியென் தோபோயிஸ், … Read more

ஈஃபிள் டவர் மீது ஏவுகணை தாக்குதல்-உக்ரைன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி 16-வது நாள் இன்றும் ஆகிறது. உக்ரைனில்  ரஷ்யா ராணுவப்படை ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம், ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடைகளை  அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் விதித்து வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலக புகழ்பெற்ற ஈஃபிள் டவர் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுவது போன்ற கிராபிக்ஸ் வீடியோவை உக்ரைன் அரசு ட்விட்டரில் … Read more

2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் பாரிஸ்…!

2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி கோலாகலமாக 32-வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது.இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.குறிப்பாக,இந்தியாவில் இருந்து மொத்தம் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அதன்படி நடைபெற்ற போட்டிகளின் முடிவில்,பதக்க பட்டியலில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் முதல் இடமும்,சீனா … Read more

பாரிஸில் மக்களை உறையவைத்த பயங்கர சத்தம்.. இதுதான் காரணம்!

பாரிஸில் திடீரென ஏற்பட்ட சத்தத்தால் அங்குள்ள மக்கள் உறைந்து போகினார்கள். பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பலத்த சத்தம் ஒலித்தது. இந்த சத்தத்தால் அங்குள்ள அதிர்ச்சிக்குள்ளானார்கள். இந்த சத்தம் சில வினாடிகள் நீடித்ததால், குண்டுவெடித்தால் இந்த சத்தம் ஏற்பட்டது என மக்கள் உறைந்து போகினார்கள். இந்த சத்தம் காரணமாக, பாரிசில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒரு போட்டி, சில வினாடிகள் நிறுத்தப்பட்டது. இந்த சத்தத்தால் வீடுகளில் அதிர்வு … Read more

இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு “Eiffel Tower”க்கு செல்ல அனுமதி.!

இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாரிஸில் உள்ள “Eiffel Tower”ஐ காண முடியும். இன்று முதல் “Eiffel Tower” திறக்க தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஈபிள் டவர் மூடப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஈபிள் டவர் இவ்வளவு நாள் மூடப்பட்டபோது இதுவே முதல் முறையாகம். Eiffel Tower உலக அதிசயத்தில் ஒன்றானது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பிரான்சில் குறிப்பாக பாரிஸில் கொரோனா வைரஸ் பரவுவதைக் தடுக்க இந்த ஈபிள் டவர் மூடப்பட்டது. 324 … Read more

மூன்று மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட உள்ள பாரிஸ் அருங்காட்சியகம்.!

பாரிஸ் நகரில் புகழ்பெற்ற ஓர்சே ( Orsay museum ) அருங்காட்சியகம் தற்போது மூன்று மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுகிறது. உலகம் முழுக்க கொரோனா பாதிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு சுற்றுலா தளங்கள் பார்வையாளர்கள் இன்றி வெறிச்சோடின. அங்கு பராமரிக்க ஆள் இன்று பூட்டப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு கொஞ்சம் குறைந்து வரும் நாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிரான்சு நாட்டில் கடந்த மே மாதம் பாதி முதல் … Read more

தண்ணீரில் கொரோனா வைரஸ் உள்ளாதா? பிரான்ஸ் நாட்டு நீர் ஆய்வகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

தண்ணீரில் கொரோனா வைரஸ் உள்ளதாக, பிரான்சின் நீர் ஆய்வகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கொரோனா வைரஸ் தண்ணீரிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  அங்குள்ள சீன் நதி மற்றும் எவர் கால்வாய் நீர், பூங்காக்கள், தோட்ட பணிகள் மற்றும் அங்குள்ள அலங்கார நீரூற்றுகளுக்கும் பயன்படுகிறது. இந்நிலையில், இந்த தண்ணீரில் 27 மாதிரிகளை பாரிஸின் நீர் ஆய்வகம் பரிசோதனை செய்தது. அதில் … Read more

2 சர்வதேச விமான நிலையங்களை இயக்கி வரும்… அகஸ்டின் தெ ரோமனெட்க்கு கொரோனா வைரஸ் …

சீனாவின் உகானில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் சீனாவை மட்டுமல்லாமல் உலகம் நாடுகளை மிரட்டி வருகிறது. சீனாவை அடுத்து தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை அதிகமாக உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர். ஆனாலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. உலகமுழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் … Read more